ரிவார்டு பாயிண்டுகளுக்கு ‘கோவிந்தா’ போட்ட எஸ்பிஐ! வருத்தத்தில் கிரெடிட் கார்டு பயனாளர்கள்!

SBI Reward Points Latest News :  எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் கட்டணங்களை செலுத்துபவர்களுக்கு இனிமேல் ரிவார்ட் பாயிண்ட் எனப்படும் வெகுமதிப் புள்ளிகள் கிடைக்காது. இது தொடர்பாக கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் சில கிரெடிட் கார்டுகளுக்கு எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் போது ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படாது என்றால், சில வகை கார்டுகளில் ஏப்ரல் 15, 2024 முதல் இந்த விதிமுறைகள் பொருந்தும்

1 /8

எஸ்பிஐ கார்டு கிரெடிட் கார்டில் மார்ச் 15 முதல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில்,  எஸ்பிஐ கார்டு அதன் வட்டி கணக்கீட்டு முறையைத் திருத்தியுள்ளது.

2 /8

குறைந்தபட்ச நிலுவைத் தொகை (MAD) இப்போது மொத்த ஜிஎஸ்டி, EMI தொகைகள், 100% கட்டணம்/கட்டணங்கள், சில்லறைச் செலவுகள், ரொக்க முன்பணங்கள் தொடர்பான விதிகளில் மாறுதல் செய்யப்பட்டது

3 /8

ஏப்ரல் 1, 2024 முதல், AURUM, SBI Card Elite, SimplyCLICK போன்ற SBI கிரெடிட் கார்டுகள் மூலம், வாடகைக் கொடுப்பனவுகளுக்கான ரிவார்டு பாயின்ட்டுகள் நிறுத்தப்படும்.  

4 /8

AURUM கார்டு வைத்திருப்பவர்களுக்கு DreamFolks மெம்பர்ஷிப் கார்டுகளை வழங்குவதை SBI கார்டு நிறுத்திவிட்டது.இணையதளம் மற்றும் ஆப்ஸ் வழியாக டிஜிட்டல் அணுகலை நோக்கி நகர்கிறது.

5 /8

வங்கிகள், தங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பரிசுகள், இலவசங்கள், தள்ளுபடிகள் என ஊக்கம் கொடுத்து கிரெடிட் கார்டைப் பயன்படுத்த ஊக்குவிக்கின்றன

6 /8

தற்போது வங்கி, கடை, பயணம், பில்களை செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல், முதலீடு செய்தல், IRCTC டிக்கெட் புக்கிங்கைப் பெறுதல் என அனைத்துமே எஸ்பிஐயின் யூனோ செயலி மூலம் செய்யப்படுகிறது. இது, வங்கியின் கணக்கில் இருக்கும் பணத்தை செலவு செய்யும் முறை. இதற்கு வெகுமதி புள்ளிகள் கிடையாது

7 /8

உண்மையில் செலவழிக்கப்பட்ட மதிப்பை விட வெகுமதி புள்ளிகள் மிகக் குறைவாகவே மதிப்பிடப்படும் ஏனெனில், இது வங்கி வழங்கும் சலுகை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். ரிவார்டு புள்ளிகளை விமான பயணம், பொருட்கள் வாங்குவது, பணம் செலுத்துவது, பரிசு வவுச்சர்கள் என பலவிதங்களில் மாற்றிக் கொள்ளலாம்

8 /8

பில் செலுத்துதல் , ஷாப்பிங், உணவு, பயணம் கட்டணம் என பணம் செலுத்துவதற்கு டெபிட் காரு பயன்படுத்துவதைவிட கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதி எனப்படும் ரிவார்டு புள்ளிகள் கொடுக்கப்படுகிறது