செவ்வாயின் அருளால் இனி ‘இந்த’ ராசிகள் கை வைத்த காரியம் எல்லாம் வெற்றி தான்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் இருக்கும்.இப்படிப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி செவ்வாய் கிரகம் கன்னி ராசியில் பெயர்ச்சியாக உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசிகளை மற்றவுள்ளன. செவ்வாய் கிரகம் சுபமான கிரகமாக கருதப்படுகின்றது. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அந்த நபர் உறுதி மற்றும் விடாமுயற்சியால் பல நன்மைகளை பெறுவார்கள்.

1 /7

செவ்வாய் பெயர்ச்சி: ஆகஸ்ட் 18 அன்று, செவ்வாய் கிரகம் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகும். பொதுவாக அனைத்து கிரகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவார்கள்.

2 /7

ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் தொடர்ந்து சுபமாக இருந்தால்,  அந்த நபரின் தன்னம்பிக்கை அபரிமிதமாக அதிகரிக்கும். அவர்கள் மிகுந்த மன உறுதி மற்றும் தைரியத்துடன்  வேலைகளை ஈடுபாட்டுடன் செய்வார்கள். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அந்த நபர் உறுதி மற்றும் விடாமுயற்சியால் பல நன்மைகளை பெறுவார்கள்.

3 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய்  லக்னத்திற்கும் எட்டாம் வீட்டிற்கும் அதிபதி. செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் உங்கள் எதிரிகளை வெல்ல முடியும். சட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக முடிவு வரும். பணியிடத்திலும் பல சாதகமான மாற்றங்களைக் காணலாம். வேலை சம்பந்தமாக, நீங்கள் நீண்ட தூரம் அல்லது வெளியூர் பயணம் செய்ய வேண்டியிருக்கும், இது உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.

4 /7

மிதுனம் - கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் சொத்து, வீடு, வாகனம் வாங்குவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். அதன் பலன் காரணமாக, உங்களுக்கு நல்ல பணம் கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி காண்பதுடன், வியாபாரத்திலும் லாபம் பெறலாம். தங்கள் வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள். இந்த நேரத்தில், உங்கள் துணையுடன் உங்கள் உறவு முன்பை விட வலுவாக இருக்கும். பல துறைகளில் பண ஆதாயம் உண்டாகும். உங்கள் போட்டியாளர்கள் உங்கள் நண்பர்களாகலாம்.

5 /7

விருச்சிகம் - செவ்வாய்ப் பெயர்ச்சியால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், சில புதிய நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள், குடும்பத்தினரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தின் பார்வையில், பழைய நோயிலிருந்து விடுபடுவீர்கள். சம்பளம் உயரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் சேமிக்கவும் முடியும். செவ்வாயின் அம்சம் காரணமாக, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்தக் காலம் சிறப்பாக இருக்கும். சட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக முடிவு வரும்.

6 /7

தனுசு ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியினால் தொழில் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். பணியிடமாற்றம் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலை தேடும் மாணவர்களுக்கு நல்ல பலனைத் தரும். வெளிநாட்டில் இருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிலரின் திருமணம் நிச்சயிக்கப்படும். நீங்கள் முழு ஆற்றலும் நம்பிக்கையும் அடைவீர்கள். பணியிடத்தில் பொறுப்பு அதிகரிக்கும், அதை திறமையாக நிறைவேற்றுவீர்கள்.  

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது