செவ்வாய் பெயர்ச்சி: இன்னும் 5 நாட்களில் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், முழு ராசிபலன் இதோ

Mars Transit: கிரக பெயர்ச்சிகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் மார்ச் 15 ஆம் தேதி பெயர்ச்சியாகவுள்ளார். 

Mars Transit: நிலம், வீடு, மனை, ஆற்றல், திறமை, தைரியம், பலம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள செவ்வாய் இன்னும் 5 நாட்களில் சனியின் ராசியான கும்பத்தில் நுழையவுள்ளார். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சிலருக்கு சுப விளைவுகள் இருக்கும். சிலர் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். அனைத்து ராசிகளிலும் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

செவ்வாய் பெயர்ச்சியின் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு ஆற்றல், தன்னம்பிக்கை, தைரியம் உத்வேகம் ஆகியவை அதிகரிக்கும். எனினும் பொறுமையின்மை, பதற்றம், கோபம் ஆகியவற்றையும் அனுபவிப்பீர்கள். இவற்றின் மீது கட்டுப்பாடு அவசியம். 

2 /13

செவ்வாய் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் பண வரவை அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். கல்வியில் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

3 /13

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சியால் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண ஆதரவை பெறுவீர்கள். புதிய உறவுகள் உருவாகும், பயணங்களை மெற்கொள்வீர்கள். இவற்றால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

4 /13

கடக ராசிக்காரர்கள் கும்பத்தில் செவ்வாயின் பெயர்ச்சியால் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிப்பார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் கூடும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம். அதிகமாக பேசுவதையும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் தவிர்கவும். 

5 /13

செவ்வாயின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை, ஆற்றல், தைரியம் மற்றும் தலைமைத்துவ திறன்களை அதிகரிக்க கூடும். போட்டிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

6 /13

செவ்வாய் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு பணியில் முன்னேற்றம், கல்வியில் வெற்றி, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் சோர்வு அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. 

7 /13

செவ்வாயின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இவர்களுக்கு பணி இடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உறவுகளில் சில மனக்கசப்புகள் வரலாம்.

8 /13

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆற்றல், தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கூடும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நிதி நிலை மேம்படும். 

9 /13

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். பல வித நல்ல செய்திகளை பெறுவீர்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும், படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.   

10 /13

செவ்வாய் பெயர்ச்சி காலம் மகர ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் காலமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முதலீடுகளால் லாபம் கிடைக்கும். சமூகத்தில்  கௌரவம் கூடும். ஆரோக்கியம் மேம்படும்.   

11 /13

செவ்வாயின் பெயர்ச்சியால், கும்ப ராசிக்காரர்களுக்கு ஆற்றல், தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். பல வித புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். 

12 /13

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் மீன ராசிக்காரர்களுக்கு ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.