FIFA world cup 2022 : ஆபாச படம், செக்ஸ் டாய்ஸ், பீர்... நீளும் தடை பட்டியல்களும், நிபந்தனைகளும்!

மத்திய கிழக்கு நாடுகளில் முதன்முதலாக பிபா உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. நாளை முதல் லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இஸ்லாமிய நாடான கத்தார் பல்வேறு தடைகளையும், கடும் நிபந்தனைகளையும் விதித்துள்ளது. 

  • Nov 19, 2022, 15:35 PM IST

 

 

 

 

 

 

1 /4

உலகக்கோப்பை காணவரும் ரசிகர்கள் செக்ஸ் டாய்ஸ் வைத்திருந்தாலோ அல்லது ஆபாச படங்களை வைத்திருந்தாலோ கடும் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும். கத்தாரில் இதுபோன்ற பொருள்களை கொண்டுவர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 /4

பன்றி கறி உங்களுக்கு பிடிக்கும் என்றால் உங்களுக்கு, இது உங்களுக்கு கெட்ட செய்தி. கத்தார் ஓர் இஸ்லாமிய நாடு என்பதால் பன்றி கறி அங்கு அனுமதி கிடையாது.   

3 /4

தோஹாவில் இறங்கும் ரசிகர்கள் வரியில்லா மதுவை எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை. போட்டிக்கு முன்னும், பின்னும் பீர் சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் (நவ. 18) பிபா அந்த முடிவை ரத்து செய்தது.

4 /4

கத்தாருக்குப் பயணம் செய்யும்போது, நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், அந்த நாட்டுக்கு மதம் சார்ந்த புனித நூல்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனென்றால், அங்கு அதற்கும் தடை வித்திக்கப்பட்டுள்ளது.