ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரைசா வில்சனின் புகைப்படங்கள்! என்ன ஆச்சு?

raiza wilson: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் அறிமுகமான நடிகை ரைசா வில்சன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். 

 

1 /5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-1 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாடல் அழகி ரைசா வில்சன்.  இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  

2 /5

பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் தன்னுடன் இருந்த சக போட்டியாளரும், நடிகருமான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் கதாநாயகியாக ரைசா தமிழில் அறிமுகமானார்.  

3 /5

அதன் பின்னர் 'எஃப்ஐஆர்' மற்றும் 'காபி வித் காதல்' போன்ற படங்களில் ரைசா நடித்திருக்கிறார்.  தற்போது இவரது நடிப்பில் 'கருங்காப்பியம்' எனும் படம் வெளியாகவுள்ளது.  

4 /5

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுது வடியும் புகைப்படங்களை பதிவிட்டு, சில குழப்பமான கேப்ஷனையும் பதிவிட்டு இருக்கிறார்.  

5 /5

ரைசாவின் புகைப்படத்தை பார்க்க ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.  மேலும் இவரது கேப்ஷனை பார்த்த பிறகு ரசிகர்கள் பலரும் இவர் பாசிட்டிவாக இருக்கிறாரா அல்லது நெகட்டிவாக இருக்கிறாரா என குழம்பி வருகின்றனர்.