டெல்லி சட்டமன்றத்தை சந்தினி சவுக் பகுதியில் உள்ள செங்கோட்டையுடன் இணைக்கும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை ஒரு அறைக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. (Image courtesy: ANI)
டெல்லி சட்டமன்றத்தை சந்தினி சவுக் பகுதியில் உள்ள செங்கோட்டையுடன் இணைக்கும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை ஒரு அறைக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. (Image courtesy: ANI)
மேலும் விவரங்களை அளித்த சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், சுதந்திர போராட்ட வீரர்களை அழைத்து செல்லும் போது, பதில் தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்க்க பிரிட்டிஷ் காலத்து சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டது என்று கூறினார். (Image courtesy: ANI)
1912 ஆண்டு தலைநகர், கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட பிறகு டெல்லி சட்டமன்றம் பயன்பாட்டுக்கு வந்தது. இது 1926 ஆம் ஆண்டு நீதிமன்றமாக மாற்றப்பட்டது மற்றும் பிரிட்டிஷார் இந்த சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி சுதந்திரப் போராட்ட வீரர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். (Image courtesy: ANI)
ஒரு சுரங்கப்பாதையைப் பற்றி கேள்விப்பட்டோம், நாங்கள் அதன் வரலாற்றைத் தேட முயற்சித்தோம் வதந்தி பரவியுள்ளது என சபாநாயகர் கூறினார். (Image courtesy: ANI)
"இப்போது சுரங்கப்பாதையில் நுழையும் பகுதியை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம் ஆனால் மெட்ரோ திட்டங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்புகளால் சுரங்கப்பாதையின் அனைத்து பாதைகளும் அழிந்துவிட்டதால் நாங்கள் அதை மேலும் தோண்டவில்லை" என்று கோயல் மேலும் கூறினார். (Image courtesy: ANI)
அடுத்த சுதந்திர தினத்திற்குள் இந்த அறை சுற்றுலாத் தலமாக மாற்றப்படும், அதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இது சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஆலயமாக இருக்கும் என்றார். (Image courtesy: ANI)