சிக்கலில் ஸ்ரேயாஸ் அய்யர்..! 1 ஆண்டு தடை விதிக்கும் பிசிசிஐ?

ரஞ்சி டிராபியில் விளையாடாமல் பொய் சாக்குபோக்குகளை கூறியதால் ஸ்ரேயாஸ் அய்யர் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளது. 

 

1 /7

இஷான் கிஷனைத் தொடர்ந்து பிசிசிஐ அதிருப்திகுள்ளாகியிருக்கிறார் ஸ்ரேயாஸ் அய்யர். காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், இப்போது பிட்னஸூடன் இருக்கிறார்.  

2 /7

அதனால் அவர் உடனடியாக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியது. ஆனால் அதனை ஸ்ரேயாஸ் அய்யர் புறக்கணித்து விட்டார்.   

3 /7

ரஞ்சி டிராபியில் விளையாடாத ஸ்ரேயாஸ் அய்யர், தான் ஏன் விளையாடவில்லை என்ற காரணத்தை பிசிசிஐக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதில் தனக்கு தசைப்பிடிப்பு இருப்பதாக கூறியுள்ளார்.  

4 /7

ஆனால் இந்த காரணத்தை பிசிசிஐ ஏற்க மறுத்துவிட்டது. தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் ஸ்ரேயாஸ் அய்யர் பிட்னஸூடன் இருப்பதாக அறிக்கை கொடுத்துவிட்டதால், ஸ்ரேயாஸ் பொய் சொல்வதாக அதிருப்தி அடைந்துள்ளது.  

5 /7

ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடினால் காயம் ஏற்பட்டு அதனால் ஐபிஎல் போட்டிகள் விளையாட முடியாமல் போகலாம் என்பதால் ஸ்ரேயாஸ், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்திருக்கிறார்.  

6 /7

இதனை உறுதி செய்திருக்கும் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கையில் இஷான் கிஷன் சிக்கியிருக்கும் நிலையில், அடுத்ததாக இப்போது ஸ்ரேயாஸ் அய்யரும் இணைந்துள்ளார்.  

7 /7

இருவரின் பெயர்களும் தலா 1 ஆண்டுக்கு இந்திய அணி தேர்வில் பரிசீலிக்கப்படாது என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றனர். அதன்பிறகு அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்பதால் இருவரும் இனி இந்திய அணியில் விளையாடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.