அதிகமாக டீ குடிப்பவர்களா நீங்கள்? இந்த ஆபத்து எல்லாம் வர வாய்ப்பு இருக்கு!

தினசரி பலரும் விரும்பி அருந்தும் தேநீர் உடலுக்கு சில நிமிடங்கள் சுறுசுறுப்பு தந்தாலும் அவற்றை அதிகமாக உட்கொள்வது பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 

1 /4

தேயிலையில் காஃபின் என்கிற பொருள் உள்ளது, இந்த காஃபினை நீங்கள் அதிகமாக உட்கொள்ளும்போது உங்களுக்கு அதிக பதட்டம் மற்றும் சௌகரியமான உணர்வில்லாமை போன்றவை ஏற்படும்.  

2 /4

தேநீரில் உள்ள தியோபிலின் என்கிற பொருள் உங்கள் செரிமான திறனை குறைத்து மலச்சிக்கல் பிரச்சனையை  ஏற்படுத்துகிறது.  அதிகளவில் தேநீர் குடிப்பதால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.  

3 /4

தேநீரில் உள்ள காஃபின் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.  இதனால் உங்களுக்கு ஞாபக மறதி, சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.  

4 /4

கர்ப்ப காலத்தில் தேநீர் அருந்தாமல் இருப்பது நல்லது, ஏனெனில் இந்த காலத்தில் அதிகளவில் தேநீர் குடித்தால் கருச்சிதைவு அல்லது குறைவான எடையுடன் குழந்தை பிறப்பது போன்றவை ஏற்படும்..