இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

இரவில் தண்ணீர் அதிகம் குடித்தால் தூக்கம் தடைபடும். இதனால் உங்களுக்கு உடல் களைப்பு, பகலில் தூங்கி வழிதல், கண் எரிச்சல், கவனக்குறைவு , பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

1 /5

தண்ணீர் குடிப்பது நல்ல விஷயம் தான், இரவு பகல் என எந்த நேரத்திலும் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் தாகம் எடுக்காமல் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல.

2 /5

இரவில் படுக்கைக்கு செல்லும்போது தண்ணீர் குடித்தால் உங்களின் தூக்கம் பாதிக்கப்படும் மற்றும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

3 /5

இரவில் தூங்குவதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள், இரவில் உங்கள் சிறுநீர்ப்பை காலியாக தான் இருக்க வேண்டும். தூங்குவதற்கு முன்னர் சிறுநீர் பையில் எஞ்சியிருக்கும் நீரை வெளியேற்றுவது நல்லது.

4 /5

இரவில் தண்ணீர் அதிகம் குடித்தால் தூக்கம் தடைபடும். இதனால் உங்களுக்கு உடல் களைப்பு, பகலில் தூங்கி வழிதல், கண் எரிச்சல், கவனக்குறைவு , பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

5 /5

வேண்டுமானால் இரவில் சாப்பிட்ட பிறகு மற்றும் தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை சரிசெய்துவிடும்.