அம்பானி போல பணக்காரர் ஆக ஆசையா? ‘இதை’ செய்யுங்க போதும்..

Tips To Become Millionaire : பலருக்கு பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை எப்படி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்? இதோ சில டிப்ஸ்!

Tips To Become Millionaire In Tamil : சிலர், பரம்பரை பணக்காரர்களாக இருப்பர். சிலர், அவர்களாகவே சொந்த உழைப்பை போட்டு சம்பாதித்து பணக்காரர்களாக இருப்பர். ‘ஏழையாக பிறந்தது தப்பில்லை, ஏழையாக இறப்பதுதான் தப்பு’ என்ற சினிமா டைலாக்கை பார்த்திருப்போம்-பேசியிருப்போம். அப்படி, மனதில் உந்துதலுடன் பணக்காரர் ஆக வேண்டும் என்று பாடுபடுபவர்களுக்கான டிப்ஸ்கள இங்கு பார்ப்போம். 

1 /7

பணக்காரர் ஆக, நீங்கள் பணக்கார குடும்பத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தனி மனித ஒழுக்கத்தோடும், சரியான திட்டமிடலோடும் ஒரு விஷயத்தை தொடங்கினாலே போதும். கண்டிப்பாக வாழ்வில் செல்வம் உங்களை வந்து சேரும். அதற்கான டிப்ஸ், இதோ. 

2 /7

பணக்காரர் ஆக நாம் செய்ய வேண்டிய விஷயங்களுள் ஒன்று, இளம் வயதில் இருந்தே சேமிக்க ஆரம்பிப்பதுதான். மாத வருமானம் வாங்குபவர்களுக்கு இது நன்றாகவே பொருந்தும். அனைத்து செலவுகளும் போக, உங்களுக்கு தேவைப்படாத பணம் என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் மாதா மாதம் எடுத்து வைக்க ஆரம்பியுங்கள். இது, நீண்ட காலத்திற்கு உதவும் பணமாகவும் இருக்கும். 

3 /7

தேவையற்ற செலவுகளை குறையுங்கள். எந்த பொருளை வாங்குவதற்கு முன்னரும் அது உங்களுக்கு தேவையானதா என ஒரு முறை கேள்வி எழுப்பி கொள்ளுங்கள். அதே போல, உங்கள் செலவுகளுக்காக கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். 

4 /7

உங்களது மாத வருமான தொகையில் இருந்து 15 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமான சதவிகிதத்தை சேமித்து வையுங்கள். இது, நீங்கள் ஓய்வு பெறும் காலத்தில் உங்களுக்கு உதவலாம். 

5 /7

நீங்கள் வாங்கும் மாத சம்பளத்தை விட, அதிகமாக சம்பாதிக்க முயற்சி செய்யுங்கள். அதிக நேர வேலை அல்லது ஃப்ரீலேன்சிங் ஆகியவற்றில் ஈடுபடலாம். இது, உங்கள் வருமானத்தை அதிகமாக்க உதவும். 

6 /7

பணத்தை சேமித்து மட்டும் வைத்துக்கொண்டிருந்தால் அது இரட்டிப்பாகாது. கண்டிப்பாக அதை ஒரு நல்ல, தீர விசாரித்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். 

7 /7

உங்களது வாழ்க்கை தரம் உயரும் போது கண்டிப்பாக செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே, வாழ்வியல் முறைகளால் ஏற்படும் அதிக செலவுகளுக்கு அடிமையாக வேண்டாம். முறையான வகையில் சேமித்து அதை இரட்டிப்பாக்க கற்றுக்கொள்ள வேண்டும்.