புத்தாண்டை வரவேற்ற விளையாட்டுத்துறை பிரபலங்களின் 2022 Greetings

உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் தங்கள் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த ஆண்டு நல்லாண்டாக மலர வாழ்த்திய விளையாட்டு பிரபலங்கள்...

1 /5

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார், அதில் ரொனால்டோ தனது குழந்தைகள் மற்றும் காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடுவதைக் காணலாம்

2 /5

பேட்மிண்டன் வீராங்கனையும், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான பிவி சிந்து, 2022ஆம் ஆண்டில் சிறப்பான செயல்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளார். 26 வயதான அவர், புதிய ஆண்டை வரவேற்கும் போது, ​​குழந்தையுடன் கேக் வெட்டிக் கொண்டிருக்கும் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். சிந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

3 /5

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 2021 ஆம் ஆண்டில் தனது சாதனைகள் குறித்த உணர்ச்சிகரமான வீடியோவுடன் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்

4 /5

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்காவில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் புத்தாண்டை வரவேற்றார். விராட் தனது மனைவி அனுஷ்காவுடன் படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார்

5 /5

சாய்னா நேவால் தனது குடும்பத்துடன் 2022 புத்தாண்டை வரவேற்றார். கணவர் பி. காஷ்யப் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் படங்களை வெளியிட்டார் சாய்னா நெய்வால்