ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறார்கள், ஆனால் அதற்காக அவர்கள் என்ன என்ன முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி தோல்வி முடிவாகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற நபர்கள் காலையில் செய்யும் பழக்க வழக்கங்கள் உள்ளன.
வெற்றிகரமான நபர்கள் நன்றாக தூங்கி எழுகின்றனர். அவர்கள் இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுகின்றனர். இதனை பின்பற்றுவதால் மன அழுத்தம் குறைகிறது. இதனால் ஆற்றல் அதிகரிக்கிறது.
வெற்றிகரமான நபர்கள் காலையில் எதிர்மறையான எண்ணங்களை யோசிக்க மாட்டார்கள். புதிதாக ஒன்றைச் செய்ய முயற்சி செய்வார்கள். கடினமாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் கொள்கின்றனர்.
அடுத்தநாளுக்கு தேவையானதை முதல் நாளே ஏற்பாடு செய்து கொள்கின்றனர். இதன் மூலம் நேரம் மிச்சமாகிறது. அதில் கூடுதல் வேலைகளை செய்ய முடிகிறது. மேலும் காலையில் அவசர அவசரமாக எதையும் செய்ய தேவையில்லை.
வாழ்க்கையில் நிறைய வெற்றியை அடைந்தவர்கள் அவர்களின் ஆரோக்கியத்தில் அதிக முன்னுரிமை அளிக்கின்றனர். உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள, காலையில் நடைப்பயிற்சி, ஜாகிங், ஸ்கிப்பிங், ஜிம் என பல உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்.
அதே போல வாழ்க்கையில் வெற்றி பெற உடலும் சீராக இருப்பது முக்கியம். எனவே, காலையில் எண்ணெய், வறுத்த அல்லது இனிப்பு உணவை சாப்பிட மாட்டார்கள். ஏனெனில் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.