சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!

Weight Loss Tips: உடலின் பல பாகங்களில் சேரும் கொழுப்பினால் உடல் பருமன் அதிகரிப்பதோடு பல வித நோய்களுக்கும் இது காரணமாகின்றது. ஆகையால் இதை உடனடியாக சரி செய்வது மிக அவசியம். 

Weight Loss Tips: கோடை காலத்தில் எடை இழப்புக்கு சற்று வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. கோடையில் நீரிழப்பு அதிகமாக உள்ளதால் இதை ஈடுகட்டும் வகையில் பல வித பானங்களை நாம் உட்கொள்கிறோம். சம்மரில் எடை இழக்க நமக்கு உதவக்கூடிய பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

கோடையில் சில பானங்களை குடிப்பதன் மூலம் எடை இழப்பில் நமக்கு பெரிய நன்மை கிடைக்கும். எளிதாக தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /8

சுரைக்காய் சாறு: இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, செரிமான அமைப்பையும் சீராக்குகிறது. காலையில் சுரைக்காய் சாறு குடிப்பது உடல் எடையை குறைப்பதுடன் உடலுக்கு புத்துணர்ச்சியும் அளிக்கின்றது.

3 /8

கிரீன் டீ: தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகின்றது. அதன் சுவை கசப்பாக இருந்தாலும், எடை குறைப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

4 /8

இளநீர்: இளநீரில் கலோரி அளவு குறைவாகவும் ஊட்டச்சத்துகள் மிக அதிகமாகவும் உள்ளன. ஆகையால் இது உடல் எடையை குறைக்க மிக உதவியாக இருக்கின்றது. மேலும் கோடையில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும் இது அளிக்கின்றது.   

5 /8

எலுமிச்சை நீர்: எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் கண்டிப்பாக எலுமிச்சை நீரை குடிக்கலாம். காலையில் எழுந்ததும், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து, அதனுடன் கருப்பு உப்பு கலந்து குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை வெகுவாக குறையும்.

6 /8

சோம்பு நீர்: சோம்பு செரிமானத்தை சீராக்குகிறது. இது பெரும்பாலும் உணவுக்குப் பிறகு மெல்லப்படுகிறது. ஏனெனில் இது இயற்கையான வழியில் வாய்க்கு புத்துணர்ச்சி அளிக்க பயன்படுத்தப்படுகிறது. இது எடை இழப்பில் பெரிய அளவில் உதவும். 

7 /8

ஓம நீர்: ஓம நீரை உட்கொள்வது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, இது எடையைக் குறைக்க உதவுகிறது. ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிகட்டி குடிக்கலாம். இது செரிமானத்தையும் சீராக்கும். 

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.