சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவை அனைவரும் பாராட்டு மழையால் குளிர வைத்துக் கொண்டிருக்கின்றனர். உழைப்புக்கும், திட்டமிட்ட செயல்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி இது என சூர்யாவை அறிந்தவர்கள் சொல்கின்றனர். திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சூர்யாவின் பல பரிணாமங்களில் சில உங்களுக்காக...
தானாய் சேர்ந்த கூட்டத்தையும் காப்பான் இந்த அஞ்சான். மாசு என்கிற மாசிலாமணி, சென்னையில் ஒரு நாள் இருந்தால் அவன் இவன் என 7ஆம் அறிவு அயனாய் ஆதவனாய் உதிக்கும். ஜூன் ஆர்-இல் சில்லுன்னு ஒரு காதல் வந்தால், ப்ரெண்ட்ஸ் சும்மா விடுவாங்களா? பிதாமகன் ஆய்த எழுத்து வைத்தால், பேரழகன் மாயாவியாகிவிடுவான்.
Photo Courtesy: Surya's instragram and File photos
உன்னை நினைத்து மெளனம் பேசியது என்றால் உயிர்லே கலந்து நந்தா காக்க காக்க என்று கோரிக்கை வரும். வீட்டின் பெரியண்ணாவுக்கு காதலே நிம்மதி, உன்னைநினைத்து உயிரிலே கலந்தேன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்று சொல்லும் சூ..சூ..சூரரைப் போற்று சூர்யா....
சூர்யா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது காக்க காக்க ரொமான்ஸ் சூர்யா தான்...
சில்லுன்னு ஒரு காதல் செய்யும் காதலன் சூர்யா. சரி, காதல் என்றாலே ஐஸ் வைக்க வேண்டும் தானே? ஆனால் காதல் வெப்பத்தையல்லவா கொடுக்கும்?
ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா பாக்குறியா? என்று சவால் விடும் சூர்யா சிங்கம்
வாரணம் ஆயிரம் புடை சூழ வலம் வந்தால் போருக்குத் தயார் என்று அரசன் வருவதாக பொருள். ஆனால் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அரசர்கள் உட்பட சாமானியர்களின் இதயத்தையும் கொள்ளைக் கொண்ட வாரணம் சூர்யா...
சூரரைப் போற்றும் சூராதி சூரன் ஆனால் அமைதியாய் பொறுமையாய் அனைத்தையும் கையாளும் விவேகி
இவர் நேருக்கு நேர் சூர்யா மட்டுமல்ல நேர்மையான சூரியன்
இன்றைய சூழலில் ஒரு சாமனியன் அரசியல்வாதியாகும் கதையில் கதாபாத்திரமாகவே வாழ்ந்த சூர்யா...