Roen Olmi காளான் உணவு மட்டுமில்லை! தங்கத்தை உருவாக்கும் ஃபேக்டரி! விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

Mushrooms Produce Gold : உணவில் காளான் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் காளானில் இருந்து தங்கம் செய்யலாம் என்று யாராவது சொன்னால், என்ன தோன்றும்? காளானில் இருந்து தங்கத்தை உருவாக்கலாம் என்ற கோவா ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு, உலகின் பார்வையை கோவாவை நோக்கி திருப்பியுள்ளது. 

Gold From Mushroom: காட்டு காளானில் இருந்து தங்க நானோ துகள்களை கோவா விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இந்த ஆய்வு காளான் ஆராய்ச்சியை நோக்கி மக்களின் கவனத்தை திருப்பியுள்ளது...

1 /7

காளானில் இருந்து தங்க நானோ துகள்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதைச் செய்து காட்டிய கோவா விஞ்ஞானிகள், காட்டு காளான்களில் இருந்து தங்க நானோ துகள்களை தயாரித்துள்ளனர்.

2 /7

ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள காளானில், நோய்களிலிருந்து பாதுகாக்கும் மருத்துவ பண்புகளும் நிறைந்துள்ளது. அல்சைமர் போன்ற நோய், புற்றுநோய் வராமல் பாதுகாக்கும் ஆற்றலும் காளானுக்கு உள்ளது

3 /7

ஊட்டச்சத்து மிகுந்த சைவ உணவை, ‘தங்கமான உணவு’ என்று சொல்லி கேள்விபட்டிருக்கலாம்.... ஆனால் அது தங்கத்தையே கொடுத்தால், எப்படி இருக்கும்? இதை செய்து காட்டி விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்

4 /7

கோவாவின் உள்ளூர் மக்களால் 'ரான் ஓல்மி' (roen olmi) என்று அழைக்கப்படுகிறது. இந்த காளானில் இருந்து விஞ்ஞானிகள் தங்கத்தை தயார் செய்துள்ளதாக, ஜியோமிக்ரோபயாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது

5 /7

டாக்டர் சுஜாதா தபோல்கர் மற்றும் டாக்டர் நந்த் குமார் காமத் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தக் குழு, ரோன் ஓல்மி காளானில் இருந்து தங்க நானோ துகள்களை தயாரித்துள்ளது. கோவா அரசு முன்பும் இந்த ஆராய்ச்சி  முன்வைக்கப்பட்டுள்ளது

6 /7

கோவாவின் இயற்கை வளங்களை புதிய தொழில்நுட்பத்தில் பயன்படுத்த இந்த ‘செயற்கை தங்கம்’ உதவும். சமீப காலமாக நானோ துகள்களின் தேவை அதிகரித்துள்ளது. பயோமெடிக்கல் மற்றும் பயோடெக்னாலஜிக்கல் அறிவியலில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நானோ தங்கத் துகள்களை மருத்துவ அறிவியலில் பயன்படுத்தலாம். மருந்து விநியோகம், மருத்துவ இமேஜிங் மற்றும் மின்னணு உற்பத்தி ஆகியவற்றில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் ஆராய்ச்சி இது.

7 /7

காளானில் இருந்து தயாரிக்கப்படும் தங்கம் கோவாவின் பொருளாதார நிலையை மேலும் மேம்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்