இந்தியாவின் 360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவின் ஷாட் சலெக்ஷனை கிரிக்கெட் உலகம் கொண்டாடி வருகிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அமர்களப்படுத்தினார் சூர்யகுமார் யாதவ்.
அவரின் 360 டிகிரி ஷாட் சலெக்ஷன் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ஜிம்பாப்வே வீரர் கடைசி ஓவரில் ஆப்சைடில் வீசப்பட்ட பந்தை கீப்பருக்கு பின்னால் சிக்சருக்கு மாற்றிய வித்தையை வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகம்.
அவர் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து என பாராட்டு தெரிவித்துள்ள கிரிக்கெட் நிபுணர்கள், இதேபோன்று நீண்ட காலத்துக்கு அவர் விளையாட வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர்.
(சூர்யகுமார் யாதவ்)