விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கவுள்ள 360 பிளேயர்?

Suryakumar Yadav: இந்தியாவிற்காக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் என்று  சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். 

 

1 /6

சமீபத்தில் இந்திய அணியின் டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம் பெற போராடி வருகிறார். இதுவரை 1 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.   

2 /6

2023 ஒருநாள் உலக கோப்பை அணியில் இடம் பெற்ற சூர்யகுமார் யாதவ் அவ்வளவாக ரன்கள் அடிக்கவில்லை. தொடர்ந்து ஒருநாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் பெரிதாக சாதிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.   

3 /6

சூர்யகுமார் யாதவ் தலைமையில் சமீபத்தில் இந்திய அணி இலங்கையுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார்.   

4 /6

இந்திய அணி அடுத்ததாக அக்டோபர் மாதம் பங்களாதேஷுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இடம் பெற சூர்யகுமார் யாதவ் முயற்சி செய்து வருகிறார்.    

5 /6

இதற்காக ஆகஸ்ட் 27-ம் தேதி சேலத்தில் தொடங்கும் புச்சி பாபு தொடரில் மும்பை அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான மும்பை விளையாட உள்ளது. இந்த தொடர் சூர்யகுமாருக்கு உதவிகரமாக இருக்கும்.   

6 /6

சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு நடைபெற்ற துலீப் டிராபியில் விளையாடினார். இதுவரை 82 முதல்தர போட்டிகளில் 5628 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 29 அரைசதங்கள் மற்றும் 14 சதங்களுடன் 43.62 சராசரியை வைத்துள்ளார்.