தளபதி விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவர் தான்! மாஸ் அப்டேட்!

Thalapathy 69 Update: விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். 2026 தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

 

1 /5

விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'GOAT' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் கடைசியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் இயக்குனர் யார் என்று அதிக எதிர்பார்ப்பு இருந்தது.  

2 /5

2026 தேர்தல் முதல் முழுநேர அரசியலுக்கு வருவதாக விஜய் அறிவித்துள்ளார்.  தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  

3 /5

இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான 69வது படத்தை இயக்கப்போவது இவர் தான் என்று பலரது பெயர்கள் கூறப்பட்டது.  கடையாக ஹெச் வினோத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.    

4 /5

எஸ்எஸ் ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி போன்ற இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது.    

5 /5

எச்.வினோத் - விஜய் இணையும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகார்வப்பூர்வமாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.  விஜய்யின் கடைசி படம் அரசியல் சம்பந்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.