தொப்பை குறைஞ்சு தட்டையான வயிறு வேணுமா? அப்ப இந்த 5 யோகா ஆசனத்தை செய்யுங்கள்

Yoga For Belly Fat :  வயிறு மற்றும் இடுப்பை சுற்றியிருக்கும் கொழுப்பைக் குறைக்க இனி ஜிம்முக்கும் செல்ல வேண்டியதில்லை. சில எளிய யோகாசனங்களை வீட்டில் தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை கொழுப்பை சுலபமாக குறைக்கலாம்.

தவறான உணவு பழக்கம் மற்றும் தினசரி பழக்கம் ஆகியவை தான் உடல் எடை கூட முக்கிய காரணமாகும். இதனால் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. எனவே, நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தியில் சரியான அக்கறையை காட்ட விரும்பினால் இந்த 5 யோகாசனங்களை தினமும் பயிற்சி செய்து வாருங்கள். இதன் மூலம் சுலபமாக உடல் எடை குறைக்கலாம்.

1 /6

பாலாசனம் செய்து வந்தால் நம் வயிற்றில் சேரும் கொழுப்பை விரைவாகக் குறைக்க முடியும். இதனுடன் தொடையில் படிந்திருக்கும் கொழுப்பையும் குறைக்கலாம்.   

2 /6

புஜங்காசனம் இடுப்பு கொழுப்பை அகற்ற மிகவும் பயனுள்ள யோகாசனம் ஆகும். இதனால் வயிறு மற்றும் இடுப்பை சரியான வடிவத்திற்கு கொண்டு வர முடியும்.  

3 /6

பிளாங் உடற்பயிற்சி தொப்பையின் கொழுப்பைக் கரைத்து அபரிமிதமான ஆற்றலைக் கொண்ட ஒரு உடற்பயிற்சி ஆகும். இந்த உடற்பயிற்சியின் மூலம் வயிறு, முதுகு, கை, மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள தசைகளை கரைக்க உதவுகிறது.  

4 /6

திரிகோணாசனம் மிக முக்கியமான யோகா பயிற்சி ஆகும். இடுப்பின் ஓரங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை விரைவாகக் குறைக்க இந்த ஆசனம் உதவும்.   

5 /6

தனுராசனம் வயிற்று மற்றும் முதுகு தசைகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ள யோகாசன பயிற்சியாகும். இந்த ஆசனம் எடை இழப்பு பயணத்தை எளிதாக்க உதவும். இந்த யோகாசனத்தை தினமும் 2-5 நிமிடங்கள் செய்யலாம்.

6 /6

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.