பெற்றோர்கள் குழந்தைகள் முன் செய்யக்கூடாத விஷயங்கள்! மீறி செய்தால் ஆபத்து..

Things Parents Should Not Do In Front Of Their Kids : பெற்றோர்கள் சில விஷயங்களை குழந்தைகள் முன்பு செய்யவே கூடாது! அவை என்னென்ன தெரியுமா?

Things Parents Should Not Do In Front Of Their Kids : குழந்தைகள் அனைவரும், சின்ன உடம்பில் அடைப்பட்ட பெரிய மனிதர்கள் என்பதை பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அவர்கள், எதை சிறுவயதில் இருந்து பார்த்து வளர்கின்றனரோ, அதுவாகவே வளர்ந்த பின்பு மாறுகின்றனர். அவர்கள் வளர்கையில், அவர்களை சுற்றி அழகான சூழல் இருந்தால் அவர்களும் நல்ல மனிதர்களாக வளர்ந்து நிற்பர். ஆனால், அதுவே அதற்கு நேர்மாறாக அமைந்தால், அவர்களுக்கு மகிழ்ச்சியான எதிர்காலம் அமைவது சிரமம் ஆகும். எனவே, பெற்றோர்கள், தங்களின் குழந்தைகள் எதிரே செய்யக்கூடாத சில விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

1 /8

பெற்றோர்களுக்குள் சண்டை வருவது சகஜம் ஆகும். ஆனால், சண்டைக்கு பிறகு இருவரும் குழந்தைகள் எதிரே வெவ்வேறு அறைகளுக்கு சென்று உறங்க கூடாது. பின்னர், அவர்களுக்கும் எதிர்காலத்தில் ஒரு பிரச்சனை வந்தால் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது தெரியாமல் போய்விடும்.

2 /8

குழந்தைகள் எதிரே எப்போதும் போன் அல்லது லேப்டாப் பார்த்துக்கொண்டு இருக்க கூடாது. பின்னர், அவர்களால் மனிதர்களுடன் எப்படி உரையாடுவது என்பது தெரியாமல் போய்விடும்.

3 /8

பெற்றோர்களுக்குள் எந்த சண்டை வந்தாலும் உங்கள் துணையை குழந்தைகள் எதிரேயே மட்டப்படுத்தி பேசுவது அவர்களுக்கு படிப்பினையாக போய்விடும். எனவே, அது போன்ற செயல்களை உங்கள் குழந்தைகள் இடையே செய்யக்கூடாது. 

4 /8

பண பரிவர்த்தனைகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த அறிவு பெற்றோர்களுக்கு இருப்பது குழந்தைகளுக்கு நல்ல படிப்பினையாக இருக்கும். சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பணத்தின் மதிப்பு குறித்து கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

5 /8

குழந்தைகள் எதிரே சத்தமாக சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். இது அவர்களுக்கு பதற்றத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்கலாம். 

6 /8

உங்கள் குழந்தைகள் எது செய்தாலும் அதை குறைகூறிக்கொண்டு அல்லது நெகடிவான கருத்துகளை சொல்லக்கூடாது. இது அவர்களின் தன்னம்பிக்கையை கெடுக்கலாம். 

7 /8

உங்கள் குழந்தையிடம் நெகடிவான உடல் மொழியை ஒரு போதும் உபயோகிக்க கூடாது. இதனால், அவர்களுக்குள் பாதுகாப்பற்ற உணர்வு உருவாகலாம். 

8 /8

வாழ்க்கை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமையும். பெரியவர்களாலேயே ஒருவரது பிரச்சனையை இன்னொருவரால் உணர்ந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கையில், பெற்றோர்கள் அவர்களின் பிரச்சனைகளை குழந்தைகளிடம் கூறி அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறாகும். எனவே, குழந்தைகளிடம் அவர்களின் மனநிலை பக்குவம் எப்படி இருக்குமோ அது போலத்தான் பேச வேண்டும்.