உடல் கொழுப்பை எரிக்க... மெட்டாபாலிஸத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை!

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில், உட்கார்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது மற்றும் துரித உணவு என்னும் குப்பை உணவுகளை  சாப்பிடுவது ஆகியவற்றின் காரணமாக, வளர்சிதை மாற்றம் பலவீனமடையத் தொடங்குகிறது.

 

1 /7

கெட்ட பழக்கங்களால் உங்கள் வளர்சிதை மாற்றத்தை நீங்கள் மந்தமாக்கினால், உடல் பருமன் அதிகரிப்பதோடு பல நோய்கள் உங்கள் உடலைச் சூழ்ந்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வளர்சிதை மாற்றமும் பலவீனம் அடையாமல் இருக்க, நீங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

2 /7

நொறுக்குத் தீனி, நாள் முழுவதும் பிஸ்கட் சாப்பிடுதல், சோடா மற்றும் குளுக்கோஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு அவற்றின் பாதிப்புகள் தொடரும். எனவே துரித உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உண்ணவும்.  

3 /7

குறைவான தூக்கம் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. எனவே தூக்கமின்மை உடல் பருமனை அதிகரிக்கும்.

4 /7

உடற்பயிற்சியின்மையால், உடலின் மெட்டபாலிசம் மிகவும் பலவீனமாகிவிடும். தினமும் சில எளிய உடற்பயிற்சிகள் முக்கியம் மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும்.

5 /7

மெட்டபாலிஸத்தை அதிகரிக்க தண்ணீர் போதுமான அளவு அருந்துவது மிக முக்கியம். நீர் சத்து சரியாக கிடைக்காமல் போனால், உடலில் தற்காலிக மனச்சோர்வு பிரச்சனை ஏற்படலாம், இது வளர்சிதை மாற்றத்தை கடுமையாக பாதிக்கும். 

6 /7

ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி அட்டவணையை தயார் செய்யவும். சில எளிய நடத்தை மாற்றங்கள், நீங்கள் பெறும் தூக்கத்தின் அளவில் சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுதல் போன்றவை, உங்கள் வளர்சிதை மாற்றம் வேகமாக செயல்பட உதவும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.