Year Ender 2023: ஒருநாள் அரங்கில் நடப்பு 2023ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 வேகப்பந்துவீச்சாளர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
இந்தாண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. எனவே, தொடருக்கு முன்னர் பல ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன.
அந்த வகையில், இந்தாண்டு ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்களை இதில் காணலாம்.
ஹரிஸ் ராஃப்: பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ராஃப் இந்த பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்தாண்டில் 22 போட்டிகளில் மொத்தம் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
ஷாகின் அப்ரிடி: பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளரான ஷாகின் அப்ரிடி இதில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இவர் 21 போட்டிகளில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முகமது ஷமி: உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்தாண்டில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தினார். (எகனாமி 5.32)
சந்தீப் லமிஷேன்: நேபாள அணியின் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் லமிஷேன் 21 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். (எகனாமி 4.85). ஷமி, சந்தீப் லமிஷேன் இருவரும் 3ஆவது இடத்தை பிடிக்கின்றனர்.
முகமது சிராஜ்: இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 25 போட்டிகளில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவர் இரண்டாவது இடத்தை பிடிக்கிறார்.
குல்தீப் யாதவ்: குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இவர்தான் இந்தாண்டு ஓடிஐ போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார்.