2007 உலக கோப்பை மறக்க முடியாத தருணங்கள்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அதிர்ச்சிகரமாக கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை தழுவி வெளியேறிய உலக கோப்பை 2007

 

 

1 /7

2007 ஆம் ஆண்டு உலக கோப்பையில் வங்கதேசத்திடம் இந்தியா தோல்வியை தழுவி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் டிராவிட். அந்த உலக கோப்பையுடன் டிராவிட் மற்றும் கங்குலியின் உலக கோப்பை  கனவு முடிவுக்கு வந்தது.  

2 /7

அதே உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த 132 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அதனை அயர்லாந்து அணி சேஸிங் செய்து வெற்றி பெற்றது.   

3 /7

இந்த உலக கோப்பையில் கிரிக்கெட் உலகின் மாபெரும் ஸ்டார்களாக இருந்த பிரையன் லாரா மற்றும் இன்சமாம் உல் ஹக் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு விடை கொடுத்தனர்.  

4 /7

பயற்சியாளர் பாப் வூல்மர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இறந்து கிடந்தது கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியது. முதலில் சந்தேக மரணமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் தூக்கத்திலேயே அவர் உயிரிழந்திருந்தால் இயற்கை மரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அவருடைய இறப்பு குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை.  

5 /7

லசித் மலிங்கா, 2007 உலக கோப்பையில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்தார். இலங்கை - தென்னப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அவர் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.   

6 /7

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்தின் உலக கோப்பை பயணமும் அந்த உலக கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. அவர் அந்த தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஒட்டுமொத்தமாக உலக கோப்பையில் 39 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.   

7 /7

ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. ரிக்கி பாண்டிங் தலைமையில் அந்த அணி கைப்பற்றிய 2வது உலக கோப்பை ஆகும். 1999, 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியனாக அந்த அணி வலம் வந்தது.