Wellness Credit Card-ஐ அறிமுகம் செய்தது UBI: வாடிக்கையாளர்களுக்கு எக்கச்சக்க நன்மைகள்

Union Bank of India Rupay Wellness Credit Card: UBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. யூனியன் வங்கி ஜேசிபி இன்டர்நேஷனல் நெட்வொர்க்குடன் இணைந்து இந்த கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சுகாதார பரிசோதனை, ஜிம் ஸ்பா போன்ற வசதிகள் கிடைக்கும். யூனியன் வங்கியின் இந்த கிரெடிட் கார்டின் பெயர் வெல்னஸ் கிரெடிட் கார்ட் ஆகும். இந்த கார்டில் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

1 /5

யூனியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெல்னஸ் கிரெடிட் கார்டுடன் ஒவ்வொரு ஆண்டும் இலவச மருத்துவப் பரிசோதனையும் கிடைக்கிறது. இது தவிர, வாடிக்கையாளர்கள் இதற்குப் பிறகும் உடல்நலப் பரிசோதனையில் தள்ளுபடி பெறுகிறார்கள்.

2 /5

யுபிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இந்த வெல்நெல் கிரெடிட் கார்டுடன் 15 நாட்கள் முதல் 1 மாதம் வரையிலான இலவச ஜிம் மெம்பர்ஷிப்பை பெறலாம். இந்த மெம்பர்ஷிப்பை நீட்டிக்க விரும்பினாலும், அதிலும் இன்னும் 40-50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

3 /5

யுபிஐ வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு கிரெடிட் கார்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலவச ஸ்பா அமர்வைப் பெறுகிறார்கள். இதைத் தவிர, நீங்கள் ஆண்டு முழுவதும் ஸ்பாக்களுக்கான கவர்ச்சிகரமான தள்ளுபடிகளைப் பெறுவீர்கள்.  

4 /5

இந்த வெல்னஸ் கிரெடிட் கார்டில், யுபிஐ ஒரு வருடத்தில் ஒரு கோல்ஃப் அமர்வு அல்லது வகுப்பை அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கும். இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு மேலும் தள்ளுபடிகள் தொடர்ந்து கிடைக்கும்.  

5 /5

யுபிஐ வாடிக்கையாளர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் வெல்னஸ் கிரெடிட் கார்டு மூலம் லவுஞ்சுகளில் அணுகலைப் பெறலாம். இது தவிர, பல்வேறு சேவைகளின் கவர்ச்சிகரமான சலுகைகளும் கிடைக்கின்றன.