IPL 2020 இல் போட்டியிடும் அணிகளின் சிறப்பான சாதனைகளின் தனித்துவமான பதிவு In pics

2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின்றன. பல்வேறு அணிகளின்  தனித்துவமான ஐ.பி.எல் சாதனையைப் பார்ப்போம் புகைப்படங்களாக...

2008 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடங்கப்பட்டதிலிருந்து, Twenty20 கிரிக்கெட் வடிவம் பல சாதனைகளை படைத்தது. சாதனைப் பதிவுகள் என்பது தனிப்பட்ட வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஐபிஎல் அணியும் சில தனித்துவமான பதிவுகளை வைத்திருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகின்றன. பல்வேறு அணிகளின்  தனித்துவமான ஐ.பி.எல் சாதனையைப் பார்ப்போம் புகைப்படங்களாக...

1 /8

Royal Challengers Banglore: ஐ.பி.எல் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற பெயரைப் பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 2013ஆம் ஆண்டு IPL போட்டியில் 264 ரன்கள் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸின் அதிகபட்ச ஸ்கோர் என்றால், 2017ஆம் ஆண்டில் KKR அணிக்கு எதிரான போட்டியில் 49 ரன்கள் என்ற குறைந்தபட்ச ஸ்கோரை எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த ஆண்டு, விராட் கோலி தலைமையில் களம் இறங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.  

2 /8

Chennai Super Kings: மிகவும் வெற்றிகரமான அணி என்று பெருமையை இன்றளவும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். அதிக அளவிலான playoff போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மஹேந்திர சிங் தோனி தலைமையில் இந்த ஆண்டு களம் இறங்கியுள்ளது. இதுவரை அனைத்து 10 ஐ.பி.எல் தொடரிலும் playoff போட்டிகளில் விளையாடியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

3 /8

Mumbai Indians: அதிக முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை இண்டியன்ஸ் அணி என்ற பெருமையை பெற்ற அணி. இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டித்தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையில் களம் இறங்கியுள்ளது மும்பை இண்டியன்ஸ் அணி...

4 /8

Kings XI Punjab: அதிக முறை கேப்டன்கள் மாறிய அணி என்ற பதிவை கொண்டுள்ல அணி இது. மொத்தம் 12 கேப்டன்கள் ஐ.பி.எல் போட்டிகளில் மாற்றப்பப்ட்டுள்ளனர். இந்த ஆண்டு ஐ.பி.எல்லில் கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கியுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி..  

5 /8

Kolkata Knight Riders: அதிக அளவிலான வெற்றிகளை பதிவு செய்துள்ள அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இந்த அணி தொடர் வெற்றிகளையும் அதிக அளவில் பதிவு செய்துள்ளது. 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஐ.பி.எல் தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையில் களம் கண்டுள்ள அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.    

6 /8

Delhi Capitals: ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை என்ற பதிவைக் கொண்ட அணி டெல்லி கேபிடல்ஸ் அணி. தொடர் தோல்விகளை ஐ.பி.எல் போட்டித்தொடரில் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்த அணி டெல்ல்லி அணி. ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கிய முதல் சீசனில் இருந்து பங்கெடுக்கும் இந்த அணி, IPL 2020 போட்டித்தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் களம் இறங்குகிறது. 

7 /8

Sunrisers Hyderabad: ஐ.பி.எல். போட்டித்தொடரில் RCBக்கு எதிராக களம் இறங்கும் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிகபட்ச ரன்களை எடுத்த சதனையை படைத்த அணி. முதல் விக்கெட் ஜோடி 185 ரன்கள் எடுத்த சாதனையை பதிவு செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 2013 ஆம் ஆண்டில் ஐபிஎல்லின் பங்கு எடுத்தது.  2016 ஆம் ஆண்டின் ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐபிஎல் 2020 இல் டேவிட் வார்னரின் தலைமையில் சன்ரைசர்ஸ் அணி விளையாடுகிறது.

8 /8

Rajasthan Royals: ஐபிஎல் 2020 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிராக மொத்தம் 224 ரன்கள் எடுத்து அதிகபட்ச ரன்கள் எடுத்த சாதனையை படைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐபிஎல் 2020 போட்டித்தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தின் தலைமையில் ராஜஸ்தான் அணி களம் இறங்கியுள்ளது.