ஆதி குணசேகரனாக நடிக்க வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Vela Ramamoorthy: எதிர்நீச்சல் தொடரில், ஆதி குண சேகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

1 /7

தமிழ் ரசிகர்கள் அதிகம் பார்க்கும் சின்னத்திரை தொடர்களுள் ஒன்று, எதிர்நீச்சல். இந்த தொடரில்  ஆதி குணசேகரன் என்ற கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம். மறைந்த நடிகர் மாரிமுத்து இந்த கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

2 /7

மாரிமுத்து சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த கதாப்பாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவர், பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்திருக்கிறார். 

3 /7

வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்பட்டது. காரணம், இவரை சீரியலில் நடிக்க சொல்லி அழைத்தபோது, இவர் கைவசம் 5 படங்கள் இருந்ததாம். 

4 /7

சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனால் வரும் படவாய்ப்புகள் அனைத்தையும் வேல ராமமூர்த்தி நிராகரித்து வருகிறாராம். 

5 /7

படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலேயே நடித்தாலும், அதில் சம்பளம் இவருக்கு மிகவும் குறைவு என கூறப்படுகிறது. இதனால் சீரியல் மூலமாகவே தனது பெரும்பான்மையான வருவாயை வேல ராமமூர்த்தி சம்பாதித்து வருகிறார். 

6 /7

இவருக்கு ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறதாம். 

7 /7

வேல ராமமூர்த்தியின் இந்த சம்பள விவரத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். வேல ராமமூர்த்தி, கடைசியாக ரெய்டு படத்தில் நடித்திருந்தார்.