விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் இதற்கு முன் இப்படி நடந்ததே இல்லை..!

விராட் கோலி தனது 13 வருட டெஸ்ட் வாழ்க்கையில்  இங்கிலாந்துக்கு எதிரான முழு டெஸ்ட் தொடரில் விளையாடாமல் இருப்பது இதுவே முதல்முறை

 

1 /7

இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.   

2 /7

இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெறவே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமனில் உள்ளன.   

3 /7

இதைத் தொடர்ந்து வரும் 15ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.  

4 /7

ஏற்கனவே முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போதே விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக முதல் 2 போட்டிகளில் இடம் பெற மாடடர் என்று அறிவிக்கப்பட்டது.  

5 /7

 2 போட்டிகள் முடிந்த நிலையில் எஞ்சிய 3 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதிலேயும் விராட் கோலி இடம் பெறவில்லை.  

6 /7

மேலும் தனிப்பட்ட காரணத்திற்காக விராட் கோலி எஞ்சிய 3 போட்டிகளில் இடம் பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலியின் முடிவிற்கு பிசிசிஐ முழு ஆதரவும் கொடுத்து வருகிறது.   

7 /7

இந்த நிலையில், இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட கோலி விளையாடததன் மூலமாக அவரது 13 ஆண்டு டெஸ்ட் வாழ்க்கையில் முதல் முறையாக முழு டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளார்.