வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர்.. குடிச்சு பாருங்க, அசந்து போவீங்க!!

Benefits of Drinking Warm Water: நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிக்கிறோம். சிலர் நீர் அருந்துகிறோம். 

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் பல உடல்நலப் பிரச்சனைகள் தீரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். சிலர் வெந்நீரையும் சிலர் சாதாரண நீரையும் குடிப்பதுண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

முன்னோர் வழி: நம் முன்னோர் பல நூற்றாண்டுகளாக காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதை பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடிப்பதால் உடலின் பல பிரச்சனைகள் குணமாகும் என்பது அவர்களின் நம்பிக்கை. 

2 /8

சுகாதார நிபுணர்கள்: காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் பல உடல்நலப் பிரச்சனைகள் தீரும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.   

3 /8

உடல்நல நன்மைகள்:  காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /8

செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம்: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் சிறந்த செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.

5 /8

நச்சு நீக்கம்: சுடுநீர் ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது. அதாவது தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடித்து வந்தால், உடல் தானாகவே நச்சுத்தன்மையை நீக்கும். இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும். சூடான நீர் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. இதன் காரணமாக வியர்வை தொடங்குகிறது. உடலில் தேங்கியுள்ள அழுக்குகள் வியர்வை மூலம் தான் வெளியேறும்.

6 /8

எடை குறைப்பு: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இதனால் பசியை எளிதாக கட்டுப்படுத்தி அதிகமாகச் சாப்பிடுவதை தடுக்கலாம். சூடான நீர் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது.

7 /8

நீரேற்றம்: அதிகாலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. நீரேற்றமாக இருப்பது உடல் பல்வேறு செயல்பாடுகளைச் செய்வதை எளிதாக்குகிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்கலிய உறுதிப்படுத்தவில்லை