பிஎஃப் தொகைக்கும் வரி உண்டு தெரியுமா? எவ்வளவு? இதற்கான விதி என்ன? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

EPFO Update: இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு இபிஎஃப்  விதிகள் தொடர்பான பல சந்தேகங்கள் இருப்பதுண்டு. அதில் முக்கியமான சந்தேகம் வரி விதிப்பு பற்றியது. 

இபிஎஃப்ஓ -வில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வரி விதிக்கப்படுமா இல்லையா என்பது பலருக்கு பெரும் குழப்பமாகவே உள்ளது. இது குறித்த முழுமையான தகவல் பலருக்கு தெரிவதில்லை. இபிஎஃப் தொகைக்கு வரி விதிக்கப்படுமா? இபிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு எப்போது வரி விதிக்கப்படுகிறது? முழு தொகைக்கும் வரி உண்டா? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

1 /8

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை அவர்களது இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். 

2 /8

பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் பன்னிரண்டு சதவீதத்தை டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொக்கையை நிறுவனமும் செலுத்துகிறது. இந்த நிதியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அரசு வட்டியும் செலுத்துகிறது.

3 /8

இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு இபிஎஃப்  விதிகள் தொடர்பான பல சந்தேகங்கள் இருப்பதுண்டு. அதில் முக்கியமான சந்தேகம் வரி விதிப்பு பற்றியது. 

4 /8

வீட்டு வாடகை மற்றும் வங்கிக் கணக்கில் பெறும் வட்டிக்கு வருமான வரித்துறை வரி விதிக்கிறது. பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கும் வரி விதிக்கப்படுகிறது. இபிஎஃப் கணக்கிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கு பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. பிஎஃப் -இலிருந்து பணம் எடுப்பதற்கு எப்போது வரி விதிக்கப்படுகிறது என்பது பற்றி இங்கே காணலாம். 

5 /8

இபிஎஃப் விதிகளின்படி, பிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு முன் ஊழியர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஓய்வுக்குப் பிறகுதான் முழுத் தொகையையும் பிஎஃப் நிதியில் இருந்து எடுக்க முடியும். இதற்கான வயது வரம்பை இபிஎஃப்ஓ 55 ஆண்டுகள் என்று அறிவித்துள்ளது. ஓய்வு பெறுவதற்கு முன், ஒரு ஊழியர் பிஎஃப் நிதியில் இருந்து 90 சதவீதம் மட்டுமே எடுக்க முடியும்.  

6 /8

அதே நேரத்தில், ஒரு நபருக்கு வேலை போய்விட்டால், அவர் பிஎஃப் நிதியிலிருந்து முதல் முறையாக 75 சதவீதத்தையும், இரண்டாவது முறையாக முழுத் தொகையையும் எடுக்கலாம். பிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு முன் சில ஆவணங்களை நிரப்ப வேண்டும் என்பதை அனைத்து ஊழியர்களும் நினைவில் கொள்ள வேண்டும். இது தவிர, பிஎஃப் நிதியிலிருந்து தொகையை திரும்பப் பெறுவது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.  

7 /8

இபிஎஃப் கணக்கில் (PF Account) பொதுவாக கூற வேண்டுமானால் எந்த வரியும் விதிக்கப்படாது. வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் வரி விலக்கு கோரலாம். வேறு ஏதேனும் மூலத்திலிருந்து வருமானம் அல்லது பணியாளரின் பங்களிப்பின் மீது வட்டி பெறப்பட்டால் வரி விதிக்கப்படும்.

8 /8

நிறுவனத்தின் பங்களிப்புகள் மற்றும் வட்டி ஆகியவை வரிக்கு உட்பட்டவை. ஒரு ஊழியர் 5 ஆண்டுகள் ஆவதற்கு முன்பு பிஎஃப் நிதியில் இருந்து பணத்தை எடுத்தால் டிடிஎஸ் (TDS) கழிக்கப்படும். அதே நேரத்தில், ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து, பிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுத்தால், அவருக்கு வரி விதிக்கப்படாது.