கேகேஆர் அணியில் இன்னொரு ’ரிங்கு சிங்’.. யார் இந்த18 வயது ரகுவன்ஷி?

கொல்கத்தா அணியில் முதன்முறையாக ஐபிஎல் போட்டியில் இறங்கிய 18 வயதான ரகுவன்ஷி, அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பில் சால்ட் - சுனில் நரைன் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. 

 

1 /6

3வது ஓவரில் அதிரடியை தொடங்கிய சுனில் நரைன், கடைசி வரை நிறுத்தவே இல்லை. இதனிடையே தொடக்க வீரர் பில் சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் 18 வயதேயான இளம் வீரர் ரகுவன்ஷி களமிறங்கியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நார்கியே வீசிய முதல் 2 பந்துகளிலேயே பவுண்டரி அடித்து ரகுவன்ஷி அசத்தினார்.   

2 /6

இதன்பின் ஒரு பக்கம் அதிரடியாக சுனில் நரைன் சிக்சராக பொளந்துகட்ட, மறுமுனையில் நின்ற ரகுவன்ஷி கிளாசிக்கல் ஷாட்ஸ் மூலமாக பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்தது.  

3 /6

ஒரு கட்டத்திற்கு மேல் சுனில் நரைனுக்கு ஒய்டு யார்க்கரை வீசி டெல்லி பவுலர்கள் கட்டுப்படுத்த தொடங்கினர். அந்த நேரத்தில் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை ரகுவன்ஷி எடுத்து கொண்டார்.   

4 /6

ரஷீக் சலாம் வீசிய 11வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அதிரடியாக விளாசிய ரகுவன்ஷி, 25 பந்துகளில் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக குறைந்த வயதில் அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை ரகுவன்ஷி படௌத்தார்.  

5 /6

இதற்கு முன்பாக சுப்மன் கில் 18 வயது 237 நாட்களில் சாதனை படைத்தார். தற்போது ரகுவன்ஷி 18 வயது 303 நாட்களில் அரைசதம் அடித்து சாதித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடியவர் ரகுவன்ஷி.   

6 /6

அந்த உலகக்கோப்பை தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 278 ரன்களை விளாசி அசத்தி இருந்தார். கேகேஆர் அணியின் துணை பயிற்சியாளர்களில் ஒருவரான அபிஷேக் நாயரிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.