லோகேஷ் கனகராஜின் தங்கையை பார்த்துள்ளீர்களா? அடடே..இவ்ளோ அழகா இருக்காங்களே!

Who is Avantika Kanagaraj? Is She The Sister Of Lokesh Kanagaraj ? லோகேஷ் கனகராஜ்ஜின் தங்கை, அவந்திகா கனகராஜ் என்றா தகவல் இணையத்தில் பரவி வருகிறது, இது உண்மையா? யார் இந்த அவந்திகா கனகராஜ்? இங்கு பார்ப்போம். 

Who is Avantika Kanagaraj? Is She The Sister Of Lokesh Kanagaraj ? தமிழ் திரையுலகில் தற்போது டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், லோகேஷ் கனகராஜ். இவர், இதுவரை 5 படங்களே இயக்கி இருந்தாலும் தற்போது முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்குபவராக இருக்கிறார். என்னதான் இவரது படங்கள் குறித்து அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இவரது தனிப்பட்ட வாழ்க்கை கொஞ்சம் கேமராவின் கண்களில் இருந்து தள்ளியே இருக்கிறது. இவரது குடும்பம் பற்றிய பெரும்பாலான விவரங்களை இவர் எங்குமே வெளியிடுவதில்லை. ஆனால், இவரது தங்கை குறித்த தகவல்கள் மட்டும் இணையத்தில் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. லோகியின் தங்கை யார் தெரியுமா?

1 /7

லோகேஷ் கனகராஜ், நேற்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவந்திகா கனகராஜ் என்பவரும் லோகியுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து, இவர்தான் லோகேஷ் கனகராஜ்ஜின் தங்கையோ என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர். 

2 /7

அவந்திகா கனகராஜ், லோகியின் உறவினர் வழி தங்கையாக (cousin) இருப்பார் என கூறப்படுகிறது. இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

3 /7

அவந்திகா, The Route தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தை ஜெகதீஷ் பெரியசாமி நடத்தி வருகிறார். இவர்தான், லியோ படத்தின் இணை தயாரிப்பாளர். இந்த நிறுவனம் திரை பிரபலங்களுக்கானது. அவர்கள் செல்லும் நிகழ்ச்சிகள், பட விழாக்கள் போன்றவற்றை இந்த நிறுவனத்தினர் ஏற்பாடு செய்கின்றனர். இதில் முக்கிய பொறுப்பில் அவந்திகா இருப்பதாக கூறப்படுகிறது. 

4 /7

அவந்திகா, தென்னிந்தியாவின் பல்வேறு திரை பிரபலங்களுடன் நட்பாக இருக்கிறார். அவர் அட்லீயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. 

5 /7

கீர்த்தி சுரேஷும் அவந்திகாவும் கூட நல்ல தோழிகள் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் அவந்திகா பதிவிட்டிருக்கிறார். 

6 /7

லோகேஷ் கனகராஜ் உடன் அவந்திகா இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

7 /7

அவந்திகாவை லோகேஷ் கனகராஜ் உடன் பார்த்த ரசிகர்கள், “இந்த பெண் இவ்ளோ அழகா இருக்காறே..அப்போ லோகி நமக்கு இனி மச்சான்தான்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.