Aging And Hair Greying: வயதுக்கு ஏற்ப முடி ஏன் நரைக்கிறது என்றும், அதை நாம் தடுக்க முடியுமா என்பதற்கான பதில் ஆச்சரியம் அளிக்கிறது.
முடி நரைப்பதற்கான அடிப்படையை விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் ஸ்டெம் செல் சிகிச்சையளித்தால் முடியின் நிறத்தை பராமரிக்கலாம்!
உடலில் மெலனின் உற்பத்தி செய்யும் ஸ்டெம் செல்கள் சரியாக செயல்படுவதை நிறுத்தும்போது முடி நரைக்கிறது
முடியின் ஹைப்போபிக்மென்டேஷன்: ஊட்டச்சத்து குறைபாடுகள் புரதம்-ஆற்றல் ஊட்டச்சத்து குறைபாடு, தாமிரம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடும் முடி நரைக்க வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
ஸ்டெம் செல்கள், பல்வேறு உயிரணு வகைகளாக வேறுபடுகின்றன, நுண்ணறைகளில் உள்ள வளர்ச்சிப் பிரிவுகளுக்கு இடையில் மாறுவதற்கான அசாதாரண திறனைக் கொண்டுள்ளன.
வயதுக்கு ஏற்ப, இந்த செல்கள் நகரும் திறனை இழக்கின்றன, இதன் விளைவாக முடியின் நிறம் வெளுத்துப் போகிறது.
மெலனோசைட் ஸ்டெம் செல்கள் அல்லது McSC கள் எனப்படும் செல்கள் மீது கவனம் செலுத்தும் இந்த ஆராய்ச்சி பயனுள்ளது
ஸ்டெம் செல்கள் நகர, அதாவது இயங்க உதவும் மாற்றங்களை செய்தால் முடி நரைக்காமல் தடுக்கலாம்