இந்திய அணி 2023ஆம் ஆண்டில் படைத்த சாதனைகள் - அதிக சிக்ஸர்கள் முதல் அதிக சதங்கள் வரை...!

India National Cricket Team: 2023ஆம் ஆண்டில் இந்திய அணி ஓடிஐ அரங்கில் படைத்த டாப் 7 சாதனைகளை இங்கு காணலாம்.

  • Dec 26, 2023, 20:28 PM IST

 

 

 

 

 

1 /7

இந்திய அணி இந்தாண்டு மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 289 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. இதன்மூலம், ஓராண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அணியாக இந்தியா மாறியுள்ளது.   

2 /7

ஓராண்டில் அதிக ஓடிஐ வெற்றிகளை குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்தாண்டு 35 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளை வென்றது. ஆனால், 2003ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணி 35 போட்டிகளில் விளையாடி 30 போட்டிகளை வென்றது.  

3 /7

இந்தாண்டில் இந்தியா மொத்தம் 9 முறை ஓடிஐ போட்டிகளில் 350 ரன்களை தாண்டியுள்ளது. இதற்கு முன், 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்து 7 முறை 350 ரன்களை தாண்டியதுதான் சாதனையாக இருந்தது.

4 /7

ஓராண்டில் அணியாக அதிக சதத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. 2019ஆம் ஆண்டும், இந்தாண்டும் தலா 19 ஓடிஐ சதங்களை இந்தியா பதிவு செய்துள்ளது.   

5 /7

இந்தாண்டு ஓடிஐ அரங்கில் அதிக ரன்களை குவித்தது இந்திய வீரர் சுப்மான் கில்.  அவர் 1584 ரன்களை குவித்துள்ளார்.

6 /7

இந்தாண்டு ஓடிஐ அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய வீரர் குல்தீப் யாதவ். அவர் 49 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

7 /7

ஓராண்டில் ஓடிஐ அரங்கில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இந்தாண்டில் 250 சிக்ஸர்களை அடித்து இந்த சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.