Puducherry பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த 11 பேருக்கு கோவிட் தொற்று!

புதுச்சேரி மாநில அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள வந்தவர்களில் 11 பேருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 7, 2021, 11:54 PM IST
  • புதுசேரி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த 11 பேருக்கு கோவிட் தொற்று!
  • பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் காவல்துறைப் பணியாளர்கள்
  • இருவர் AINRC இன் அழைப்பாளர்கள்
Puducherry பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த 11 பேருக்கு கோவிட் தொற்று! title=

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் திரு. ரங்கசாமி  பதவியேற்றார். அவருக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதுச்சேரி மாநில அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள வந்தவர்களில் 11 பேருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நோய்த்தொற்று இருந்தவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை, அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் என்று அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | புதுச்சேரியில் N.R.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றார்

ராஜ் நிவாஸ் (Raj Nivas) வளாகத்தில் முதலமைச்சர் என் ரங்கசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பலரில் 11 பேருக்கு கோவிட் நோய் இருப்பது உறுதியானது.  

பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள வருபவர்கள் கோவிட் இல்லை என்ற சான்றிதழை (Covid negative certificate) கொண்டு வருவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ள வந்தவர்களை சோதிக்க ஒரு மொபைல் கோவிட் பரிசோதனைக் குழுவை புதுச்சேரி சுகாதாரத் துறை நியமித்திருந்தது.

Also Read | ஜோஹன்னஸ்பர்க் - தோஹா வழியாக இந்தியாவுக்கு ஹெராயின் கடத்தல்

ராஜ் நிவாஸை ஒட்டியுள்ள பாரதி பூங்கா (Bharathi park) வளாகத்தில் மொத்தம் 183 பேருக்கு ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் (Rapid Antigen Test (RAT)) எடுக்கப்பட்டது.  அதில் 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் காவல்துறைப் பணியாளர்கள் மற்றும் இருவர் AINRC இன் அழைப்பாளர்கள். இவர்கள் அனைவருக்கும் அறிகுறியற்ற கோவிட் தாக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட யாரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை, உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக புதுச்சேரி அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,746 பேருக்கு கொரோனா வைரஸ் (Corona Virus) நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 19 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 13,078 பேருக்கு கோவிட் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 2,054 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தலில் 11,024 பேரும் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ | தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டுள்ள  மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News