ட்விட்டரில் கோரிக்கை: இரவோடு இரவாக உதவி செய்த தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் வென்டிலேட்டர் உதவி கேட்டவருக்கு இரவோடு இரவாக உடனடியாக வென்டிலேட்டர் ஏற்பாடு செய்து உதவிய புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2021, 11:53 AM IST
ட்விட்டரில் கோரிக்கை:  இரவோடு இரவாக உதவி செய்த தமிழிசை சௌந்தரராஜன் title=

புதுச்சேரியில் வென்டிலேட்டர் உதவி கேட்டவருக்கு இரவோடு இரவாக உடனடியாக வென்டிலேட்டர் ஏற்பாடு செய்து உதவிய புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இடையே மோதல்போக்கு நீண்ட நாட்களாக நிலவி வந்த நிலையில், தெலுங்கானா ஆளுநராக இருந்து வரும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவை பிறப்பித்தார்.  கொரோனா காலகட்டத்தில் புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.  சிறிது தினங்களுக்கு முன் தமிழிசையின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 

நேற்று இரவு 9.17 மணியளவில் புதுச்சேரியில் உள்ள மகாத்மா மருத்துவமனையில்  உள்ள நோயாளிக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது என்று ட்விட்டரில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக இரவு 11.13 மணி அளவில் பதிலளித்த தமிழிசை, மாநில சுகாதாரத்துறை செயலாளருக்கு தகவல் அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார்.  சுகாதாரத்துறை செயலாளரும் இரவு 11.15 மணி அளவில் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொள்கிறேன் என்று பதிலளித்தார்.   பின்பு அன்றிரவே உதவி கேட்டவருக்கு உடனடியாக வென்டிலேட்டர் வழங்கப்பட்ட நோயாளிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் தற்போது  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சினிமா பட பாணியில் சமூகவலைதளத்தில் உதவி கேட்டவுடன் உடனடியாக உதவி செய்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

 

twitter2

twitter1

தன் தாயார் இறந்த துக்கத்தில் இருந்தும் சமூக வலைத்தளத்தில் உள்ள கோரிக்கையை நிராகரிக்காமல் உடனடியாக உதவி செய்த தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வருகின்றன. 

ALSO READ தமிழகத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe

Trending News