பட வாய்ப்புக்காக ''போன் செக்ஸ்'' வைத்துக் கொண்ட கபாலி நாயகி!

தேவ் டி என்ற இந்தி படத்திற்காக ஆடிஷன் நடந்த போது இயக்குனர் கேட்டுக் கொண்டதால் போன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கபாலி நாயகி ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

Last Updated : Mar 23, 2018, 05:27 PM IST
பட வாய்ப்புக்காக ''போன் செக்ஸ்'' வைத்துக் கொண்ட கபாலி நாயகி! title=

தேவ் டி என்ற இந்தி படத்திற்காக ஆடிஷன் நடந்த போது இயக்குனர் கேட்டுக் கொண்டதால் போன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கபாலி நாயகி ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

கபாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே கபாலி படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகத்திலும் பிரபலமானார்.

திரையுலகில் நீண்ட நாட்களாகவே நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருந்து வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளது. சமீப காலமாக கேஸ்டிங் கௌச் என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது. ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தர வேண்டு மென்றால் நடிகைகள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என பல நடிகைகள் குற்றம் சாட்டினர். பல பிரபலமான நடிகைகள் கூட தங்களுக்கும் அப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராதிகா ஆப்தே தற்போது அனுராக் கஷ்யப் இயக்கத்தில் "தேவ் டி" என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ஆடிஷனுக்கு சென்ற தன்னிடம், இயக்குனர் கதாபாத்திரத்திற்காக போன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கேட்டார் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். இயக்குனர் கேட்டுக் கொண்ட பின் தான் முதல் முறையாக போன் செக்ஸ் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், பாலிவுட் நடிகர் துஷார் கபூருக்கும், உங்களுக்கும் இடையே என்ன உள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு ராதிகாவோ, துஷாரின் செல்போன் நம்பர் கூட தன்னிடம் இல்லை என்றார்.  

சமீபத்திய டி.வி பேட்டி ஒன்றில் ராதிகா ஆப்தே:- தென்னிந்திய மொழிப் படம் ஒன்றில் அங்கு முதல் நாள் படப்பிடிப்பிலேயே பிரபலமான அந்த நடிகர் எனது காலைத் தடவினார். நான் கோபமடைந்து அவரை அடித்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் 'தேவ் டி'' இந்தி பட இயக்குனர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். எனவே, ராதிகா ஆப்தே பேட்டி அளித்தாலோ, டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ பிரபலங்கள் இம்முறை என்ன சொல்ல போகிறார் என்று பிரபலங்கள் வியக்கிறார்கள்.

Trending News