நடிகர் ரஜினிகாந்த் ஓர் ஆச்சரியமான மனிதர் - ஹுமா குரேசி!

நடிகர் ரஜினிகாந்த் ஓர் ஆச்சரியமான, வியக்கத்தக்க மனிதர் என காலா படத்தின் நாயகி ஹுமா குரேசி புகழாராம் சூட்டியுள்ளார்!

Last Updated : May 25, 2018, 06:35 PM IST
நடிகர் ரஜினிகாந்த் ஓர் ஆச்சரியமான மனிதர் - ஹுமா குரேசி! title=

நடிகர் ரஜினிகாந்த் ஓர் ஆச்சரியமான, வியக்கத்தக்க மனிதர் என காலா படத்தின் நாயகி ஹுமா குரேசி புகழாராம் சூட்டியுள்ளார்!

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் நாயகி ஹுமா குரோசி, காலா படத்தில் தனது அனுபவத்தினை குறித்து பகிர்ந்த்துக்கொண்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது...

ரஜினிகாந்த் அவர்களுடன் நடிப்பது என்பது என்னுடைய கனவு, அது தற்போது நிறைவேறியுள்ளது. அவருடன் இந்த படத்தில் நானும் இணைந்து நடித்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது.

படத்தின் படப்பிடிபின் ஒவ்வொரு நொடியிலும் ஒரு விசயத்தினை கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடும் அக்கரையுடன் பழகும் அவரை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.

படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களையும் பாராட்டியாக வேண்டும், பெண் காதாப்பாத்திரத்திற்கு இவ்வளவு முக்கியதுவம் கொடுத்த திரைகதை அமைத்திருக்கும் அவரை பாராட்டியே ஆக வேண்டும்.

காலா படப்பிடிப்பின் மூலம் ஓர் வாழ்க்கை பாடத்தினை கற்றுக்கொண்டேன், மேலும் எனது திரைத் துறை வாழ்வினை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் எனவும் கற்றுக்கொண்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 7-ஆம் நாள் இப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News