Dinosaurs: நீல திமிங்கலம் போன்ற பிரம்மாண்டமான டைனோசர்களின் புதைபடிமங்கள் சீனாவில் கிடைத்தன

ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியிலிருந்து சுமார் 160.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதி வரை, சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைபடிமங்கள் சீனாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 14, 2021, 08:11 PM IST
  • மூன்றுவிதமான புதைபடிமங்கள் சீனாவில் கிடைத்துள்ளன
  • இவை சுமார் 160.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தயவை
  • இவை மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வித்திடலாம்
Dinosaurs: நீல திமிங்கலம் போன்ற பிரம்மாண்டமான டைனோசர்களின் புதைபடிமங்கள் சீனாவில் கிடைத்தன title=

65.6 அடி மற்றும் 55.77 அடி நீளம் கொண்ட இரண்டு டைனோசர்களின் புதைபடிமங்களை சீனா மற்றும் பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், வடமேற்கு சீனாவில் கண்டறியப்பட்டுள்ள புதைபடிவங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத இரண்டு புதிய வகை டைனோசர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

சுமார் 130 முதல் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு டைனோசர்களின் புதைபடிவங்கள் சீனாவின் டர்பன்-ஹமி பேசினில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு வகையான டைனோசர்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

சீனாவின் டர்பன்-ஹமி பேசினில் இருந்து சுமார் 2 முதல் 5 கி.மீ. தொலைவில் இவை கண்டறியப்பட்டன. சீன அறிவியல் அகாடமி (Chinese Academy of Sciences) மற்றும் பிரேசிலின் தேசிய அருங்காட்சியகத்தின் (the National Museum of Brazil) ஆராய்ச்சியாளர்கள் வியாழக்கிழமை Nature family of journals சஞ்சிகையின் Scientific Reports பத்திரிகையில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர்.

Also Read | Neanderthals: மனிதர்களுடன் உடலுறவு கொண்டதால் நியண்டர்டால்கள் அருகியிருக்கலாம்: ஆய்வு

இந்த உயிரினங்களுக்கு, சிலுட்டிடன் சினென்சிஸ் அல்லது "சிலு" (Silutitan sinensis or "silu”) மற்றும் ஹமிடிடன் சின்ஜியான்ஜென்சிஸ் (Hamititan xinjiangensis) என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். சீன மாண்டரின் மொழியில் "சிலு" என்றால் "பட்டுச் சாலை" என்று பொருள்.  "ஹாமி" என்பது இந்த புதை படிவங்கள்  கண்டுபிடிக்கப்பட்ட ஹமி நகரத்தைக் குறிக்கிறது.

ஆய்வின் படி, சிலுடிடன் சினென்சிஸ் (Silutitan sinensis) என்பது ஒரு புதிய இனமான சோரோபாட் (sauropod) ஆகும். மிக நீண்ட கழுத்து, நீண்ட வால், பெரிய உடல் மற்றும் சிறிய தலை கொண்ட ஒரு தாவரத்தை உண்ணும் டைனோசர். டைனோசர் அதன் கழுத்து முதுகெலும்புகளில் சில சிறப்பு குணாதிசயங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இது யூஹெலோபோடிடே என்ற சவுரோபாட்களின் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கிறது, இது இதுவரை கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்பட்டது.

ஆராய்ச்சியாளர்கள் Hamititan xinjiangensis 55 அடிக்கு மேல் நீளமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளனர். தெற்கு அமெரிக்காவில் காணப்படும் சோராபோட் இனத்திற்கு ஒத்த பண்புகளை கொண்டுள்ளது. முதுகெலும்புகளுடன் கூடிய வடிவமும் முகடுகளும், இது ஆசியாவிலும் தென் அமெரிக்காவிலும் ஏராளமாக இருந்த டைட்டானோசர்ஸ் எனப்படும் சரோபோட்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்று கூறுகின்றன.

Also Read | 50 வகையான புற்றுநோயைக் கண்டறிய ஒரே ரத்த பரிசோதனை

சிலுடிடன் மாதிரி 65.6 அடிக்கு மேல் நீளமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் ஹமிடிடன் மாதிரி 55.77 அடி நீளம் கொண்டது, அதாவது இந்த டைனோசர்கள்,  நீல திமிங்கலங்கள் போல பெரியதாக இருக்கின்றன.

மூன்றாவது மாதிரி ஒரு சோம்போஸ்பாண்டிலன் சரோபாட் (somphospondylan sauropod), ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியிலிருந்து சுமார் 160.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதி வரை, சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் குழுவாக இருக்கலாம். இது நான்கு முதுகெலும்புகள் மற்றும் விலா எலும்புகளுடன் காணப்படுகிறது.  

"ஆய்வின் அந்த பகுதியைப் பற்றி நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம், இது நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு புதிர்" என்று ஆய்வின் இணை ஆசிரியரும் ரியோ டி ஜெனிரோவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குனருமான அலெக்சாண்டர் கெல்னர் ஏபிசி நியூஸிடம் கூறினார். "கிட்டத்தட்ட 'தென் அமெரிக்க' டைனோசர் ஆசியாவில் எப்படி இருக்க முடிந்தது?" என்ற கேள்வி எழுகிறது.

Also Read | பூமியில் பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை அதிகம்! காரணம் இதுதான்!

இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்காக மேலும் அராய்சி மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளதாக கெல்னர் கூறினார், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களின் முட்டைகள் மற்றும் கரு எச்சங்களால் நிரப்பப்பட்ட கூடுகள் இப்பகுதியில் மேற்பரப்பில் மறைந்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

"நாங்கள் அங்கு டைனோசர் கூடுகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறோம். இதுவே எங்கள் மிகப்பெரிய நம்பிக்கை" என்று அவர் ஏபிசி நியூஸிடம் கூறினார்.
2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தென்கிழக்கு சீனாவில் கருக்களுடன் முட்டைகளின் கூட்டில் அமர்ந்திருந்த போது ஒரு டைனோசரின் புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டது.

அதேபோல கடந்த ஆண்டு செப்டம்பரில் வடகிழக்கு சீனாவில் மற்றொரு புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை சீனாவை நோக்கி திருப்பியிருக்கின்றன.

Also Read | Gold from Water: அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News