Robot can give birth! ரோபோட்டுகளும் இனி குழந்தைகளை பெற்றெடுக்கும் - புதிய கண்டுபிடிப்பு

குழந்தைகளை பெற்றெடுக்கும் ரோபோட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2021, 10:34 AM IST
  • உயிருள்ள முதல் ரோபோ கண்டுபிடிப்பு
  • விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
  • ரோபோட்டுகளும் இனி குழந்தைகளை பெற்றெடுக்கும்
Robot can give birth! ரோபோட்டுகளும் இனி குழந்தைகளை பெற்றெடுக்கும் - புதிய கண்டுபிடிப்பு title=

வாஷிங்டன்: விஞ்ஞானிகள் உலகின் முதல் உயிருள்ள ரோபோவை உருவாக்கியுள்ளனர், இந்த புதிய ரோபோக்கள், தங்கல் ரோபோ குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். ஆப்பிரிக்க தவளைகளின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்படும் நவீன ரோபோக்களின் அளவு ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவாக இருக்கும்.

உலகின் முதல் உயிருள்ள ரோபோவை உருவாக்குவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் பெற்றுருக்கும் இந்த வெற்றியானது, விஞ்ஞானத்தில் புதிய மைல்கல் ஆகும். இந்த புதிய ரோபோவுக்கு Xenobots என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் இனப்பெருக்கம் செய்ய முடியும். ஆனால், அவற்றின் இனப்பெருக்கம் விலங்குகள் மற்றும் தாவரங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.

இந்த Xenobots ரோபோக்கள் ஆப்பிரிக்க தவளைகளின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவாக இருக்கும் இந்த ரோபோக்கள் (New Robot) முதன்முதலில் 2020 இல் உருவாக்கப்பட்டன, இப்போது அவை நகர்த்தவும், குழுக்களாக வேலை செய்யவும் மற்றும் தங்களைத் தாங்களே சரிசெய்யவும் முடியும் என்று சோதனைகள் காட்டுகின்றன.

ALSO READ | கொரோனா தடுப்பூசி வீணாவதை தடுக்க ரோபோட்

இந்த ரோபோக்கள் முற்றிலும் புதிய முறையில் உயிரியல் இனப்பெருக்கம் செய்வதாக வெர்மவுண்ட் பல்கலைக்கழகம், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் கோள வடிவமாகவும், சுமார் 3,000 செல்கள் கொண்டதாகவும் இருந்த ஜீனோபோட்கள் தங்களைப் பிரதிபலிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர், ஆனால் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது.

அதோடு, சிலகுறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் மட்டுமே. Xenobots "இயக்க பிரதிபலிப்பை" பயன்படுத்துகின்றன. இது மூலக்கூறு மட்டத்தில் கவனிக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். ஆனால் முழு செல்கள் அல்லது உயிரினங்களின் அளவை இதற்கு முன் பார்த்ததில்லை.

ALSO READ | உங்கள் முகத்தை ரோபோக்கு கொடுத்தால் 1.5 கோடி ரூபாய் 

Xenobots ரோபோக்கள் பல விஷயங்களைச் செய்யும்
Xenobots தங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுப்பதாக ஆலன் டிஸ்கவரி மையத்தின் இயக்குனர் மைக்கேல் லெவின் கூறுகிறார். ரோபோக்கள் உலோகத்தால் மட்டுமே செய்யப்பட்டவை, அவை மனிதர்களுக்குப் பதிலாக வேலை செய்யக்கூடியவை என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது. வழக்கமான ரோபோக்களைப் போலவே, ஜீனோபோட்களும் ஒரு வகை ரோபோட் ஆகும்.

ஆனால் Xenobots உயிருள்ள ஸ்டெம் செல்களிலிருந்து (Stem Cells) தயாரிக்கப்படுகின்றன. அவை, எதையும் சாப்பிடாமல் பல நாட்கள் வேலை செய்யக்கூடியவை.  கடலில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கை அகற்றுவது போன்ற அரிய பணிகளுக்கு Xenobots மிகவும் உதவியாக இருக்கும்.  

சில மாதங்களுக்கு முன்னதாக "ஆட்டோவாக்" என்று அழைக்கப்படும் ரோபோ கை ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். தடுப்பூசி வீணாவதை தடுக்க இந்த ரோபோ கை உருவாக்கப்பட்டது.  ஒரு குப்பியில் இருந்து நான்கு நிமிடங்களில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் கிட்டத்தட்ட 12 டோஸ்களை எடுத்துவிடும் இந்த ரோபோ கையை தாய்லாந்தில் உள்ள சுலாலாங்கோர்ன் பல்கலைக்கழக (Chulalongkorn University) ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியது.

பொதுவாக ஒரு குப்பியில் இருந்து 10 டோஸ் வரையிலான மருந்தை ஒரு மருத்துவ நிபுணர் எடுப்பார். இந்த AutoVacc ரோபோ கை, கிட்டத்தட்ட 20 சதவீதம் அதிக மருந்தை எடுக்கும்.

READ ALSO | ரோபோ சோபியாவின் டிஜிட்டல் கலைப்படைப்புகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News