Shocking Research: 4 வேற்று கிரகவாசிகள் பூமியைத் தாக்கக்கூடும்

ஒன்றல்ல நான்கு வேற்று கிரகங்களை சேர்ந்த ஏலியன்கள் பூமியை கைப்பற்றக்கூடும் அல்லது அழித்துவிடலாம் என கூறும் அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 1, 2022, 07:30 AM IST
  • ஏலியன்கள் பூமியை ஆக்கிரமிக்கக்கூடும் பீதியளிக்கும் ஆராய்ச்சி
  • ஒன்றல்ல நான்கு வேற்று கிரகங்கள் பூமியை தாக்கலாம்
  • மனிதர்களைப் போல மனம் கொண்டவையா ஏலியன்கள்?
Shocking Research: 4 வேற்று கிரகவாசிகள் பூமியைத் தாக்கக்கூடும் title=

ஏலியன்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அனுமானங்கள் மேலும் வலுவடையும் வகையில் ஆய்வுகளின் முடிவுகள் வெளியாகி அச்சத்தை அதிகரித்துவருகின்றன.

தீங்கு விளைவிக்கும் வேற்று கிரகவாசிகள் பூமியைத் தாக்கலாம் அல்லது படையெடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

அதிலும் ஒன்றல்ல, நான்கு வேற்று கிரகங்களை சேர்ந்த உயிரினங்கள் பூமியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று தெரிவித்துள்ளது மக்களின் கவலைகளை அதிகரிக்கும் விதமாக உள்ளது.
 
"கடந்த நூற்றாண்டில் நடந்த படையெடுப்புகளின் உலக வரலாறு, சம்பந்தப்பட்ட நாடுகளின் இராணுவ திறன்கள் மற்றும் உலகளாவிய வளர்ச்சி விகிதம்" ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | ஏலியன்களால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலா... அரசுடன் கைகோர்க்கும் NASA

பூமியை தாக்கக்கூடிய அல்லது படையெடுக்கக்கூடிய நான்கு வேற்று கிரக நாகரீகங்கள் பால்வெளியில் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். வைஸ் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஸ்பெயினில் உள்ள விகோ பல்கலைக்கழகத்தில் PhD மாணவர் ஆல்பர்டோ கபல்லெரோ, "தீங்கு விளைவிக்கும் வேற்று கிரக" நாகரிகங்களின் இருப்பு குறித்த கணிப்பை வெளியிட்டுள்ளார். 

"தீங்கிழைக்கும் வேற்று கிரக நாகரிகங்களின் பரவலை மதிப்பிடுதல்" என்ற தலைப்பில் சமர்பிக்கப்பட்ட ஆய்வில், பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வேற்று கிரக நாகரிகங்களின் பரவலை மதிப்பிடுவதற்கு கபல்லெரோ முயற்சித்துள்ளார். இருப்பினும், தனது ஆராய்ச்சியின் முடிவுகள் வரம்புக்கு உட்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

"கடந்த நூற்றாண்டில் நடந்த படையெடுப்புகளின் உலக வரலாறு, சம்பந்தப்பட்ட நாடுகளின் இராணுவ திறன்கள் மற்றும் உலகளாவிய வளர்ச்சி விகிதம்" ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஏலியன்களை கவர நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் நாசா

Arxiv ஜர்னலில் வெளியிடப்பட்ட சக மதிப்பாய்வு செய்யப்படாத ஆராய்ச்சியில், கபல்லெரோ, நிலையான விலகல்களின் மேல் வரம்புகள் ஒரு நாகரிகத்தின் "வேற்று கிரகப் படையெடுப்பின் மதிப்பிடப்பட்ட நிகழ்தகவை" (estimated probability of extraterrestrial invasion) பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, அதன் கிரகத்திற்கு நாம் செய்தி அனுப்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அத்தகைய நிகழ்தகவு "ஒரு கிரகத்தை கொல்லும் சிறுகோளின் தாக்க நிகழ்தகவை விட இரண்டு புள்ளிகள் குறைவாக உள்ளது" என்று முடிவுகள் காட்டுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

விஞ்ஞானிகள் ஒரு செய்தியை (METI, or "Messaging Extraterrestrial Intelligence") என்று அழைக்கப்படும் வேற்று கிரகங்களுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், வேற்று கிரகவாசிகளின் இருப்பு தொடர்பாக அதிகரித்து வரும் அறிகுறிகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக விவாதித்து வருகிறது.

மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா

இந்த கண்டுபிடிப்புகள் முதல், நட்சத்திரங்களுக்கு வானொலி செய்திகளை அருகிலுள்ள வாழக்கூடிய கிரகங்களுக்கு அனுப்புவது பற்றிய சர்வதேச விவாதத்திற்கு ஒரு தொடக்க புள்ளியாக செயல்படும் என்று கபல்லெரோ தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது விஞ்ஞானிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

"நமக்குத் தெரிந்த வாழ்க்கையின் அடிப்படையில் மட்டுமே நான் இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை சமர்ப்பித்துள்ளேன். வேற்றுகிரகவாசிகளின் மனம் நமக்குத் தெரியாது. வேற்று கிரக நாகரீகம் வேறுபட்ட இரசாயன கலவை கொண்ட மூளையைக் கொண்டிருக்கலாம், மேலும் அவர்களிடம் உணர்வுகளோ, உணர்ச்சிகளோ இல்லாமல் இருக்கலாம் அல்லது மனநோய் சார்ந்த நடத்தைகள் அதிகமாக இருக்கலாம்" என்று கபல்லெரோ தெரிவித்தார்.

எனவே, ஆய்வுக்காக கபல்லெரோ அடிப்படையாக கொண்டது மனிதர்களின் இயல்பைத்தான் என்பதால், இந்த ஆராய்ச்சிகளை அப்படியே எடுத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

இது போன்ற நிகழ்வு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என்று கபல்லெரோ தனது ஆய்வுத்தாளில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்ல, சுக்கிரனிலும் உயிர்கள் இருக்கலாம்: விஞ்ஞானிகள்

கடந்த 50 ஆண்டுகளில் மற்ற நாடுகளில் மனித "படையெடுப்புகளை" ஆய்வு செய்த ஆய்வாளர், தான் சேகரித்த தரவுகளை நமது விண்மீன் மண்டலத்தில் அறியப்பட்ட "எக்ஸோப்ளானெட்டுகள்" எண்ணிக்கையில் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். 

இத்தாலிய விஞ்ஞானி கிளாடியோ மக்கோன், சுமார் 15,785 எக்ஸோப்ளானெட்டுகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தத் தரவுகளையும் பகுப்பாய்வு செய்த பிறகு, நான்கு "தீங்கிழைக்கும்" அன்னிய நாகரிகங்கள் இருக்கக்கூடும் என்று கபல்லெரோ மதிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News