டெல்லியில் Rabia Girls Public School என்ற பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத 59 குழந்தைகளை அறையில் பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 9-ம் தேதி பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர், தங்களின் குழந்தைகள் அழுது அழுது சோர்ந்து போயிருப்பதை பார்த்து அதிர்ந்தனர். குழந்தைகளிடம் கேட்ட போது, பள்ளியில் காற்றோட்டமற்ற அறையில் 5 மணி நேரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், Rabia Girls Public School என்ற பள்ளியின் நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பிஞ்சு குழந்தைகளை அறையில் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறி போராட்டம் நடத்தினர்.
தற்போது குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக பெற்றோர் புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.