SeePics: ICC-க்கு போட்டியாக களமிறங்கியது BCCI!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணிதலைவர் தோனியின் 10 ஆண்டு நினைவுகூறும் புகைப்படத்தினை ICC சமீபத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது BCCI-யும் புகைப்படம் வெளியிட்டுள்ளது.

Last Updated : Jan 17, 2019, 02:36 PM IST
SeePics: ICC-க்கு போட்டியாக களமிறங்கியது BCCI! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணிதலைவர் தோனியின் 10 ஆண்டு நினைவுகூறும் புகைப்படத்தினை ICC சமீபத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது BCCI-யும் புகைப்படம் வெளியிட்டுள்ளது.

வளந்துவரும் வரும் நவநாகரீக உலகில் சவால்களும் பருவமாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இணையத்தை கலக்கிய சவால்கள்.,  ஐஸ் பக்கெட் சவால், KiKi சவால், ஸ்நூப் சவால் என அடுக்கிக்கொண்டே போகலாம்..

அந்த வரிசையில் தற்போது 2019-ஆம் ஆண்டில் முதன்முறையாக களமிறங்கியிருக்கும் சவால் #10YearChallenge. ஒரு பொருள் அல்லது நபர் பத்து ஆண்டுகளில் எவ்வாறு மாற்றம் கண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இந்த சவாலினை ஏற்று பலரும் பிரபலங்களின் 10 ஆண்டு இடைவெளி புகைப்படங்கள், பொருட்களின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இந்தியி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் MS தோனியின் புகைப்படத்தினை #10YearChallengen என்ற ஹாஸ்டேகில் வெளியிட்டது.  இதனை தொடர்ந்து தப்போது BCCI-யும் தோனியின் 10 மாற்றத்தின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது.

Trending News