Viral Video: கண்களுக்கு விருந்தாகும் பாம்புகளின் காதல் நடனம்... யாரும் பார்த்திராத அரிய காட்சி!

நாகப்பாம்புகள் மற்றும் பாம்புகள் மிகவும் ஆபத்தான ஊர்வன வகை விலங்குகள். அதனால்தானே என்னவோ பாம்பு வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 9, 2022, 12:15 PM IST
  • திருமலை காட்டில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ என பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சில வீடியோக்கள் வாழ்க்கையில் உள்ள பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை மாற்றவும் உதவுகின்றன.
  • சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
Viral Video: கண்களுக்கு விருந்தாகும் பாம்புகளின் காதல் நடனம்... யாரும் பார்த்திராத அரிய காட்சி! title=

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களைப் பார்ப்பதில் பெரும்பாலானோர் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மக்கள் கவனத்தை ஈர்க்கும் வீடியோக்களில் நகைச்சுவை வீடியோக்கள், திருமண வீடியோக்கள் மற்றும் விலங்கு வீடியோக்கள் ஆகியவை அடங்கும். விலங்குகளின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும், அவற்றின் தன்மை புரிந்து கொள்ள இருக்கும் ஆர்வமும் தான் இதுபோன்ற வீடியோக்களின் மீதான் ஈர்ப்புக்கு முக்கிய காரணம். இதுபோன்ற காணொளிகள் சில சமயங்களில் நம் மனதை அமைதிப்படுத்தவும், மகிழ்ச்சியாகவும் இருக்க உதவுகின்றன. இதுபோன்ற வீடியோக்கள் வாழ்க்கையில் உள்ள பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை மாற்றவும் உதவுகின்றன. அந்த வகையில் பாம்புகள் நடனமாடும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

நாகப்பாம்புகள் மற்றும் பாம்புகள் மிகவும் ஆபத்தான ஊர்வன வகை விலங்குகள். அதனால்தானே என்னவோ பாம்பு வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பாம்புகளின் நடனம் தொடர்பான வீடியோ உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றால் மிகையில்லை.

மேலும் படிக்க | Viral Video: பாம்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜநாகம்; இணையத்தை அதிர வைத்த வீடியோ!

வைரலாகும் பாம்பின் நடன வீடியோ:

இந்த வீடியோ Snake Kingdom என்ற Facebook கணக்கு மூலம் பகிரப்பட்ட வீடியோ. இது திருமலை காட்டில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ என அந்த வீடியோவை பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு நாகங்களும் தங்கள் உடலை மிக லாவகமாக வளைத்து நடனமாடுகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஏற்கனவே மிக அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும் படிக்க | துள்ளி விளையாட மட்டுமல்ல; குத்து சண்டையும் தெரியும்... மான்களின் அசத்தல் வீடியோ!

பாம்புகளின் முட்டைகள் 55 முதல் 60 நாட்களில் குஞ்சு பொரிக்கும். பாம்புகள் 2 முதல் 4 ஆண்டுகளில் முழு முதிர்ச்சியை அடைகின்றன. பாம்புகள் வருடத்திற்கு 4 முதல் 12 முறை தனது தோலை உதிர்கின்றன. பாம்பு தோலை தனது உறிப்பர்வதற்குக் காரணம் பாம்பின் உடல் வளர வளர செதில்கள் வளராமல் இருப்பதுதான். பாறை அல்லது கரடுமுரடான மேற்பரப்பில் தேய்ப்பதன் மூலம் பாம்பு அதன் உடலை உரிக்கிறது. பாம்புகள் இனச்சேர்க்கையைப் பார்ப்பது மிகவும் அரிது.

மேலும் படிக்க | கேமராவில் சிக்கிய அற்புத காட்சி; நாகமணியை பாதுகாக்கும் ராஜநாகம்!

மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News