ஏபிஎல் டி-20: ஆறு பாலில் ஆறு சிக்ஸ் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் :வீடியோ

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹஸ்ரதுல்லா ஸஸாய் (வயது 20) ஒரே ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2018, 06:07 PM IST
ஏபிஎல் டி-20: ஆறு பாலில் ஆறு சிக்ஸ் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் :வீடியோ title=

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி-20 போட்டி தொடர் போல, ஆப்கானிஸ்தானிலும் ஏபிஎல் டி-20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் ஐந்து அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டுக்கான ஏபிஎல் டி-20 தொடரின் 14வது போட்டியில் பால்க் லெஜண்ட்ஸ் மற்றும் காபுல் ஸ்வானன் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற பால்க் லெஜண்ட்ஸ் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிரடிக்கு பெயர்போன கிறிஸ் கெயில் 10 சிக்ஸர் 2 பவுண்டரிகள் உட்பட 48 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய காபுல் ஸ்வானன் அணியின் தொடக்க வீரர்களாக லூக்கா ரோஞ்சி மற்றும் ஹஸ்ரதுல்லா ஸஸாய் விளையாடினார்கள். அதிரடியாக விளையாடிய ஹஸ்ரதுல்லா ஸஸாய் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 17 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இவர் 12 பந்துகளில் அரை சதம் அடித்தார். 

இவர் ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்தார். இவரின் இந்த அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

 

இதற்கு முன்பு கேரி சோபர்ஸ்(1968), ரவி சாஸ்திரி(1985), ஹெர்ஷல் கிப்ஸ்(2007), யுவ்ராஜ் சிங்(2007), அலெக்ஸ் ஹேல்ஸ்(2015), ராஸ் ஒயிட்லே(2017) போன்ற வீரர்கள் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

அதேபோல 12 பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் யுவ்ராஜ் சிங்க், கிறிஸ் கெயில் பட்டியலில் தற்போது ஹஸ்ரதுல்லா ஸஸாய் இணைந்துள்ளார்.

யுவராஜ் சிக்சர் வீடியோ:-

 

நேற்று நடைபெற்ற போட்டியில் காபுல் ஸ்வானன் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Trending News