பாவனா - நவீன் திருமண வீடியோ பார்க்க!!

நடிகை பாவனா கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் கேரள மாநிலம் திருச்சூரில் இன்று காலை நடைபெற்றது.

Last Updated : Jan 22, 2018, 04:47 PM IST
பாவனா - நவீன் திருமண வீடியோ பார்க்க!! title=

தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துவருகிறார். இவரும் கன்னட படத் தயாரிப்பாளர் நவீனும் காதலித்து வந்தனர். 

இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் பாவனா வீட்டில் எளிமையாக நடந்தது.நடிகை பாவனா கன்னட தயாரிப்பாளர் நவீன் திருமணம் கேரள மாநிலம் திருச்சூரில் இன்று காலை நடைபெற்றது. எளிமையான முறையில் நடந்து முடிந்த இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இதையடுத்து, திரைத்துறையை சேர்ந்தவர்களுக்காக தம்பதியரின் வரவேற்பு நிகழ்வு திருச்சூரில் நடைபெற உள்ளது.

Trending News