‘இப்படி ஒரு பொண்ணுதான் எனக்கு மனைவியா வேணும்’: நெட்டிசன்களை புலம்ப வைத்த வைரல் வீடியோ

Rare Viral Video: மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை மேல் இருக்கும் பாசத்தை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 24, 2023, 05:14 PM IST
  • மணமகனுக்கு வந்த சோதனை, வருந்திய மணமகள்.
  • பாசக்கார மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்
  • இன்ஸ்டாகிராமில் வீடியோ வைரலானது.
‘இப்படி ஒரு பொண்ணுதான் எனக்கு மனைவியா வேணும்’: நெட்டிசன்களை புலம்ப வைத்த வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமூக ஊடக உலகில் தினமும் திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை அதிகம் பார்க்கப்படுகின்றன. இவற்றில் மணமக்களின் காதல், பாசம், கோவம், சண்டை, சிணுங்கல், கிண்டல் என பல வித உணர்ச்சிகளை காண முடிகின்றது. இவற்றில் சிலவற்றை பார்த்து நாம் மனம் விட்டு சிரிக்கிறோம். சிலவற்றை பார்த்து உணர்ச்சிவசப்படுகிறோம். அப்படி ஒரு திருமண வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 

தற்போது வைரல் ஆகி வரும் வீடியோவில் வரும் காட்சிகளை இணையவாசிகள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். இதில் மணமகள் மணமகன் மீது காட்டும் பசம் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இதில், மணமகனுக்கு ஏற்படும் சிக்கலை பார்த்து மணமகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் உடனடியாக அதை தீர்க்க செயலில் ஈடுபடுகிறார். 

மணமகனுக்கு வந்த சோதனை, வருந்திய மணமகள்

தற்போது வெளிவந்துள்ள சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவில், மணமகனுக்கு திடீரென ஒரு பிரச்சனை வருவதையும் உடனே மணமகளின் முகம் வாடுவதையும் காண முடிகின்றது. வீடியோவின் துவக்கத்தில் அனைத்தும் நன்றாகவே உள்ளது. மணமக்கள் மணமேடையில் நின்றுகொண்டு இருக்கிறார்கள். அவர்களை சுற்றி சில உறவினர்களும் இருப்பதை காண முடிகின்றது. ஆனால் அப்போது மாப்பிள்ளையின் கண்ணில் ஒரு பூச்சி சென்றுவிடுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கண்களை மூடிக்கொண்டு முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொள்கிறார். 

மேலும் படிக்க | 30 நொடியில் உயிரை காலி செய்யும் ராட்சத விலங்கு: கொமோடா டிராகன் வைரல் வீடியோ

மறுபுறம், மாப்பிள்ளையின் இத்தகைய நிலையைக் கண்டு மணப்பெண் கலங்கிப்போகிறார். அவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சி சட்டென்று இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகிறது. உடனே அவர் மாப்பிள்ளையின் கண்ணில் விழுந்திருக்கும் பூச்சியை அகற்றும் வேலையில் இறங்குகிறார். மாப்பிள்ளையின் கண்களை விரித்து லேசாக ஊதுகிறார். எப்படியோ அந்த பூச்சியை எடுத்து மணமகனின் நிலை சரியானவுடன் தான் அவருக்கு நிம்மதி கிடைக்கிறது. 

இதன் பிறகு வீடியோவில் காணப்படும் காட்சி நமக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. கண்களில் இருந்து பூச்சியை அகற்றியவுடனும் மாப்பிள்ளைக்கு ஏதோ அசவுகரியம் இருந்ததால், மணப்பெண் அவரது கண்களில் கனிவாக ஒத்தடம் கொடுக்கிறார். பின்னர் மேடையிலேயே மணமகனின் கண்களை சுத்தம் செய்கிறார். பின்னர் தனது கைக்குட்டையால் அவரது முகத்தைச் சுத்தம் செய்கிறார். அதன் பிறகு மாப்பிள்ளைக்கு சற்று நிவாரணம் கிடைத்தது போல வீடியோவில் தோன்றுகிறது. மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை மேல் இருக்கும் பாசத்தை பார்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். 

பாசக்கார மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

இன்ஸ்டாகிராமில் வீடியோ வைரலானது

இந்த வீடியோ பல்வேறு தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் bhutni_ke_memes என்ற பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘இப்படி ஒரு பொண்ணுதான் எனக்கு மனைவியா வேணும்’ என பல நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ஒரே நிமிஷம்தான்.. கேக் காலி: வீடியோ பார்த்தா சிரிச்சி சின்னாபின்னமாய்டுவீங்க!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News