மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக அசத்தல் பாடலை வெளியிட்டார் ARR!

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் உருவாகி வரும் 99 Songs திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜூவாலமுகி பாடல் வெளியிடப்பட்டுள்ளது!

Last Updated : Mar 6, 2020, 05:04 PM IST
மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக அசத்தல் பாடலை வெளியிட்டார் ARR! title=

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் உருவாகி வரும் 99 Songs திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜூவாலமுகி பாடல் வெளியிடப்பட்டுள்ளது!

மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களை கொரவிக்கும் விதமாக இப்பாடலை தான் வெளியிட்டு இருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார். 

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜூவாலமுகி பாடல் ஆனது, பூர்வித் கௌசிக், சாஷ்வத் சிங் பாடியுள்ளனர். பாடல் வரிகளை நவ்நீத் விரிக் எழுதியுள்ளார்.

அறிமுக இயக்குனர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இத்திரைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பு நிறுவனமான ஒய்.எம் மூவிஸ் தயாரிக்கிறது மற்றும் ஐடியல் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.

முன்னதாக தயாரிப்பாளர் அவதாரம் குறித்து இசையமைப்பாளர் ARR-யிடம் கேட்கையில்.,  "நான் ஒரு தயாரிப்பாளராக மாற முடிவு செய்ததில் இருந்து நான் மறுபிறவி எடுத்தது போல் உணர்கிறேன், இது முற்றிலும் புதிய உணர்வு" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒரு திரைப்படம் தயாரிப்பதில் உள்ள சவால்களைப் பற்றியும் அவர் மனம் திறந்தார்.

இத்திரைப்படம் தனது ஒரு முதல் முயற்சி எனவும், தங்கள் அணியால் முடிந்தவற்றை தாங்கள் செய்திருப்பதாகவும், ரசிகர்களிடம் இருந்து அதற்கான உரிய அங்கிகாரம் கிடைக்கும் எனவும் அவர் தெறிவித்திருந்தார்.

Trending News