பூனையிடம் இருந்து தப்பிக்க இளைஞரின் பேன்டில் தஞ்சமடைந்த எலி - வைரல் வீடியோ

எலி ஒன்று பூனையிடம் இருந்து தப்பிக்க ஸ்மார்டாக யோசித்து இளைஞர் ஒருவரின் பேன்டில் தஞ்சமடைந்த எலியின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 17, 2023, 08:08 PM IST
  • பூனையிடம் சிக்கிய எலி
  • சாதுர்யமாக தப்பிக்கிறது
  • இணையத்தில் வைரலான வீடியோ
பூனையிடம் இருந்து தப்பிக்க இளைஞரின் பேன்டில் தஞ்சமடைந்த எலி - வைரல் வீடியோ title=

நீங்கள் அனைவரும் உங்கள் குழந்தைப் பருவத்தில் டாம் அண்ட் ஜெர்ரியை அதிகம் பார்த்திருக்க வேண்டும். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் இப்போது அவர்களுடன் சேர்ந்து கொண்டு நிச்சயம் யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். யார் பார்த்தாலும் பூனை மற்றும் எலியான டாம் அன்ட் ஜெர்ரி விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவீர்கள். அந்தளவுக்கு நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். 

பூனையிடம் இருந்து தப்பிக்க எலி செய்யும் தந்திரம், எலியை பிடிக்க பூனை செய்யும் தந்திரம் காண கண்களுக்கு அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும். இரண்டுமே சரிக்கு சமமாக விளையாட்டுகளை காட்டும். சில நேரங்களில் பூனையிடம் இருந்து தப்பிக்க எலி விரிக்கும் வலையில் பூனை வசமாக சிக்கிக் கொள்ளும். அதில் இருந்து தப்பிக்கவே அது புதியதாக யோசிக்க வேண்டியிருக்கும். அந்த நயவஞ்சக வலையில் இருந்து தப்பித்தவுடன் மீண்டும் எலியை பிடிக்க ஓடி வரும். உடனே எலி மீண்டும் உயிர் பிழைக்க ஓடோடிக் கொண்டே இருக்கும். அந்த ஓட்டத்தின் இடையே புதிய நயவஞ்சக வலையை யோசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க | பிடிக்க வந்தவரை கடிக்க பாயும் ராட்சத நாகம்..! அய்யய்யோ..என்னாச்சு? வைரல் வீடியோ..!

எலி என்ன செய்யப்போகிறது என்பதை யோசிக்கும்போது, பூனையை கொஞ்சி சாந்தப்படுத்தும். அதில் பூனை மயங்கிக் கொண்டிருக்கும்போது, அதன் பிடியில் இருந்து ஸ்மார்ட்டாக தப்பித்துவிடும். இதுதான் காலங்காலமாக டிவியில் பார்க்கும் மிகவும் சுவாரஸ்யமான விளையாட்டு. ஆனால் இதனை நேரில் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா? என்று யோசித்தால் அதற்கான பதில் இல்லை. யாருக்கும் அப்படியான வாய்ப்பு கிடைக்காது. சிலருக்கு அரிதினும் அரிதாக கிடைக்கும். அப்படியான வாய்ப்பு கிடைத்த ஒருவர் பூனை மற்றும் எலியின் டாம் அன்ட் ஜெர்ரி விளையாட்டை வீடியோவாக பதிவு செய்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

பூனையிடம் இருந்து எலி தப்பிக்கும் வைரல் வீடியோ

வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் பூனை எலியை தேடி வருகிறது. எலியானது அவ்வழியாக நின்று கொண்டிருந்த ஒருவரின் கால் பகுதியில் பேன்ட் மடிப்பில் ஒளிந்து கொள்கிறது. பூனை தேடிப் பார்க்க அதனால் கண்டு பிடிக்க முடியவில்லை. எலியும் பேன்ட் கலரிலேயே இருந்ததால் சிக்கலில் இருந்து தப்பித்துக் கொண்டது. இந்த வீடியோ தான் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோ பார்த்து ரசித்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க | பைக்கில் முத்தம் கொடுத்துக்கொண்டே சென்ற ஜோடி! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News