Video: கண்கலங்கிய ISRO தலைவர்; கட்டியணைத்து தேற்றிய பிரதமர்!

இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதார். அப்போது பிரதமர் மோடி அவரை கட்டி தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

Last Updated : Sep 7, 2019, 09:32 AM IST
Video: கண்கலங்கிய ISRO தலைவர்; கட்டியணைத்து தேற்றிய பிரதமர்! title=

இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றிய நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதார். அப்போது பிரதமர் மோடி அவரை கட்டி தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

நிலவை நெருங்கிய தருவாயில் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்., "நாட்டுக்காக வாழ்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இவர்களை நினைத்து நாடே பெருமையடைகிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உறக்கம் இன்றி இரவு பகலாக உழைத்து வருகின்றனர். பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்தை நான் உணர்ந்தேன்.

இறுதி நிமிட பின்னடைவு நிரந்தரம் அல்ல, நமது விண்வெளி திட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது. நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள்.

நானும், நாடும் உங்களுடனே இருக்கிறோம். புதிய விடியல் நமக்காக காத்திருக்கிறது. பொறியாளர்கள், விஞ்ஞானிகள் உழைப்பில் கர்வம் கொள்கிறேன். உங்கள் உழைப்பு நாட்டை தலை நிமிர வைத்துள்ளது. இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிர இஸ்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது. சாதிக்க நமக்கான வாய்ப்புகள் இன்னும் நிறைய உள்ளது." என தெரிவித்தார்.

பிரதமர் மோடி உரையாற்றும்போது இஸ்ரோ தலைவர் சிவன் உள்பட, விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழ, அவரை பிரதமர் மோடி கட்டி தழுவி ஆறுதல் தெரிவித்தார். இச்சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Trending News