’ஸ்பைடர் மேன் பூனை’ ஒரே ஜம்பில் உசரமான சுவற்றை தாண்டிய வீடியோ வைரல்

மிகவும் உயரமான சுவற்றை பூனை ஒன்று பல முறை முயன்று ஜம்ப் செய்யும் வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ அதிக பார்வைகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 27, 2023, 02:05 PM IST
  • பூனை வீடியோ இணையத்தில் வைரல்
  • தொட்டிக்குள் விழுந்து தவிக்கும் காட்சி
  • முயன்று ஜம்ப் செய்து தப்பிக்கும் வீடியோ
’ஸ்பைடர் மேன் பூனை’ ஒரே ஜம்பில் உசரமான சுவற்றை தாண்டிய வீடியோ வைரல் title=

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இப்போது வைரலாகியிருக்கும் இந்த வீடியோவிலும் நீங்கள் அதைப் பார்க்கலாம். வாழவே முடியாது என்கிற சூழலில் தன்னிடம் இருக்கும் அத்தனை பலங்களையும் பயன்படுத்தி ஒருவர் ஒரு செயலை செய்யும்போது கிடைக்கும் வெற்றி, முடியாது என்று நினைத்து முடங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு பாடமாக அமையும். பூனையும் அப்படி தான் செய்கிறது. ஆளுயர தொட்டிக்குள் இந்த பூனை விழுந்துவிடுகிறது. காப்பாற்ற யாரும் இல்லை. தானே முயன்று அந்த தொட்டியில் இருந்து வெளியே வந்தால் தான் உண்டு. பார்ப்பவர்கள் அனைவருக்கும், ஏன்? பூனைக்கும்கூட தெரியும் இதில் இருந்து வெளியே சென்றால் தான் வாழ்வு என்று.

மேலும் படிக்க | உலகின் பயங்கரமான பாம்பு இதுதான்... அதை இந்த பையன் என்ன செய்றான் பாருங்களேன்!

எப்படியாவது தொட்டியில் இருந்து வெளியேற வேண்டும். ஆனால் என்ன செய்வது? ஏற்றிவிடுவதற்கு எதுவும் இல்லை என்று சும்மா இருக்க முடியுமா? பசி வாட்டி வதைக்குமே. அதனால் தன்னால் முடிந்தளவுக்கு ஜம்ப் செய்து எப்படியாவது தொட்டியில் இருந்து வெளியேற வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவுக்கு வருகிறது பூனை. முதல் முறை ஜம்ப் செய்கிறது அதனால் தாண்ட முடியவில்லை. ஆனால் அந்த முயற்சியில் அதற்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் தொட்டியில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்று. அடுத்த முயற்சி இன்னும் கூடுதல் நம்பிக்கையைக் கொடுக்கிறது அந்த பூனைக்கு.

இவ்வளவு நம்பிக்கை வந்த பிறகு யாரேனும் உதவி செய்ய வந்தால் யாராவது ஏற்பார்களா? நானே என் சொந்த முயற்சியில் வெளியே வந்து கொற்கிறேன் என்று தானே சொல்வார்கள். அதனை தான் பூனையும் செய்கிறது. மூன்றாவது முறை தொட்டியின் மீது ஏறுவதற்கு முன்பு யாரோ ஒருவர் பார்த்து அந்த பூனையை வெளியேற்ற ஏணியைக் கொடுக்கிறார். ஆனால் அதனை பூனை துளியும் சட்டை செய்யாமல் என்னால் முடியும் நானே தாண்டிக் கொள்கிறேன் என மீண்டும் முழு பலத்தையும் கொடுத்து ஜம்ப் செய்கிறது. அதில் அசால்டாக வெளியேவும் வந்துவிடுகிறது. இந்த வீடியோவை பார்க்கும்போதே பூரிப்பு ஏற்படுகிறது. பூனை வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து சந்தோஷமாக ஓடிவிடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி பலருக்கும் நம்பிக்கையை கொடுக்கும் வீடியோவாக மாறியிருக்கிறது.  

மேலும் படிக்க | Viral Video: மான்குட்டியை குத்தி குதறும் கழுகு... கண்ணீரை வரவழைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News